உத்தரகாண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டத்தில் உள்ள ரைகோலி பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவிகள், கதறி அழுது, தரையில் உருண்டு கிடப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தையடுத்து, பள்ளி நிர்வாகம் மற்றும் டாக்டர்கள் குழுவினர் பள்ளிக்கு சென்று பார்வையிட்டனர். பள்ளியின் தலைமை ஆசிரியை விம்லா தேவி, பேசிய போது “ கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மாணவர்களின் நடத்தையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் ஏற்பட்டது.. நேற்று மீண்டும் அதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது.
மாணவிகள் அழுதனர்.. கூச்சலிட்டனர், நடுங்குகிறார்கள், எந்த காரணமும் இல்லாமல் தலையில் அடிக்க முயன்றனர். நாங்கள் பெற்றோரை அழைத்தோம், அவர்கள் உள்ளூர் சாமியாரை வரவழைத்தனர், இப்படித்தான் நிலைமை கட்டுக்குள் வந்தது,” என்று கூறினார்.
இதேபோன்ற சம்பவம் பஞ்சாப்கரில் உள்ள ஒரு பள்ளியில் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வகுப்பின் நடுவில் நடந்தது… பின்னர் மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் சிறுமிகள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாகவும், கண்பார்வை குறைவாக இருப்பதாகவும், மிகவும் பதட்டமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.. ஒரே நேரத்தில் பலர் மன நிலை கோளாறால் பாதிக்கப்பட்டு இது போன்ற செயல்களில் ஈடுபடுவது மாஸ் ஹிஸ்டீரியா (Mass Hysteria)என்று அழைக்கப்படுகிறது..
மாஸ் ஹிஸ்டீரியா என்றால் என்ன? மாஸ் ஹிஸ்டீரியா என்பது அசாதாரணமான மற்றும் இயல்பற்ற நடத்தைகள், எண்ணங்கள் மற்றும் உணர்வுகள், அல்லது ஒரு குழு மக்களிடையே பகிரப்படும் அதீத உணர்ச்சி பெருக்கான நிகழ்வாகும்.. பெரும்பாலும் மாஸ் ஹிஸ்டீரியாவை ஒரு வகையான மனமாற்றக் கோளாறு அல்லது உணர்ச்சி அல்லது மனநலத்தால் தூண்டப்படும் உடல் அறிகுறிகளை உள்ளடக்கிய பதற்றமான மனநல நிலை என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.