fbpx

நடுரோட்டில் நண்பரை வெட்டி கொலை செய்தவரை.. சரமாரியாக அடித்தே கொன்ற ஊர் மக்கள்..!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே லிங்கவாடியில் குடியிருப்பவர் ராமசாமி. இவரது மகன் தங்கராஜா(41). இவர் டி.வி மெக்கானிக்காக உள்ளார். அதே ஊரைச் சேர்ந்தவர் உதயகுமார் (37). இவர்கள் இருவரும் இன்று ஊரின் அருகே நின்று பேசிக்‍கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த உதயகுமார் அவர் வைத்திருந்த அரிவாளால் தங்கராஜாவை வெட்டியுள்ளார்.

இதனால் தங்கராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை பார்த்த அங்கிருந்த கிராம மக்கள், உதயகுமாரை பிடித்து சராமரியாக தாக்கினர். இதனால் அவரும் பலத்த காயம் அடைந்தார். அவரை நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உதயகுமார் உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு பாஸ்கரன், துணை சூப்பிரண்டு அருண்கபிலன் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். மேலும் பட்டப்பகலில் டி.வி. மெக்கானிக் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவமும், அவரை கொலை செய்தவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவமும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Rupa

Next Post

கமலுடன் இணைகிறார் நவரச நாயகன் கார்த்திக்..! இந்தியன் - 2 படத்தில் முக்கிய கதாபாத்திரம்..?

Sun Aug 7 , 2022
கமல்ஹாசனின் இந்தியன் -2 படத்தில் நவரச நாயகன் நடிகர் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் தந்தை – மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து, கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அரசுத் துறையில் அதிகாரிகள் செய்யும் ஊழலை களையும் விதமாக இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க, […]
’HE IS BACK’..! உதயநிதி போட்ட ட்வீட்..! செம வைரலாகும் இந்தியன் - 2 அப்டேட்..!

You May Like