எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் மின்சார சட்டதிருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது..
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.. எனினும் விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றை கண்டித்து எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால், மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் முடங்கி வருகின்றன.. இந்நிலையில் இன்று மின்சாரத் திருத்த மசோதா அல்லது எரிசக்தி பாதுகாப்பு (திருத்தம்) மசோதா, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது..
மின்சார விநியோகத் துறையில் தனியார் நிறுவனங்களின் நுழைவை உறுதி செய்வதையும், தொலைத்தொடர்பு சேவைகளைப் போலவே மின் நுகர்வோர் தனியார் நிறுவனங்களின் பல சேவை வழங்குனர்களையும் தேர்வு செய்ய இந்த மசோதா வழிவகை செய்கிறது…
மின்சாரச் சட்டத்தின் 62-வது பிரிவில் திருத்தம் செய்து புதிய மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளதால் ஒரு வருடத்தில் கட்டணத்தில் தரப்படுத்தப்பட்ட திருத்தம் மற்றும் (மின்சார ஒழுங்குமுறை) ஆணையத்தால் அதிகபட்ச உச்சவரம்பு மற்றும் குறைந்தபட்ச கட்டணத்தை கட்டாயமாக நிர்ணயம் செய்வதற்கான விதிகளை உருவாக்குகிறது. மேலும் இந்த மசோதா கட்டண பாதுகாப்பு பொறிமுறையை வலுப்படுத்தவும், கட்டுப்பாட்டாளர்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கவும் உறுதி செய்கிறது.. ஆனால் மின் பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்..
இந்த சட்டதிருத்த்தால் அரசு நடத்தும் மின் வாரியத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தும்.. எனவே தனியார் உரிமதாரர்கள் லாபம் ஈட்டும் பகுதிகளில் அதாவது தொழில்துறை மற்றும் வணிக நுகர்வோருக்கு மட்டுமே மின்சாரத்தை வழங்க விரும்புகிறார்கள்.. இதனால் லாபம் ஈட்டும் பகுதிகள் அரசுக்கு சொந்தமான மின் வாரியம் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களாக மாறும் என்று கூறப்படுகிறது..
எனினும் இந்த மசோதாவுக்கு திரிணாமூல் காங்கிரஸ், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.. இதையடுத்து இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அவைத்தலைவர் அனுப்பி வைத்தார்..