fbpx

8-வது முறையாக பீகார் முதலமைச்சராகும் நிதிஷ் குமார்.. துணை முதல்வர் பதவி யாருக்கு..?

பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் இன்று மாலை மீண்டும் பதவியேற்க உள்ளார். அவருடன் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பீகார் மாநிலத்தி கடந்த 2020-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக – ஐக்கிய ஜனதா தள கூட்டணி அமைத்து போட்டியிட்டது.. இதில் பா.ஜ.க 74 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 45 இடங்களிலும் வெற்றி பெற்றது.. பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ் குமார் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.. இந்த தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் 79, காங்கிரஸ் 19 தொகுதிகளில் வென்றன.

இதனிடையே முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு எதிராக பீகார் மாநில பா.ஜ.க நிர்வாகிகள் செயல்பட்டு வந்ததால் இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல் நிலவி வந்தது. குறிப்பாக மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை நிதிஷ்குமார் தவிர்த்து வந்தார்.. மேலும், ஐக்கிய ஜனதா தள கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆர்.பி.சிங்யை வைத்து ஆட்சியையும், கட்சியையும் உடைக்க பா.ஜ.க திட்டமிடுவதாக ஐக்கிய ஜனதா தளத்திற்கு சந்தேகம் எழுந்த நிலையில் பா.ஜ.க உடனான கூட்டணியை முறித்து கொள்வதாக நிதிஷ்குமார் அறிவித்தார்.

அதை தொடர்ந்து ஆளுநர் பாகு சவுதனை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கிய நிதிஷ், பின்னர் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தோஜஸ்வி யாதவ்வை சந்தித்து புதிய கூட்டணியை உறுதிபடுத்தினார். அப்போது, ஐக்கிய ஜனதா தளம் , ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடது சாரியம் எம்.எல்.ஏ.கள் பங்கேற்ற கூட்டு கூட்டத்தில் கூட்டணியில் சட்ட மன்ற தலைவராக நிதிஷ்குமார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதன் பின்னர், மீண்டும் ஆளுநரை தோஜஸ்வி யாதவ் உடன் சந்தித்த நிதிஷ்குமார் புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.

மேலும் தமது கூட்டணியில் 164 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்தையும் நிதிஷ்குமார் ஆளுநரிடம் வழங்கினார். இதையடுத்து, அவரை பதவியேற்குமாறு ஆளுநர் அழைப்பு விடுத்த நிலையில் பீகார் முதலமைச்சராக 8 வது முறையாக இன்று மாலை 4 மணிக்கு நிதிஷ்குமார் பதவியேற்க உள்ளார். அவருடன் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்.

பீகார் முதலமைச்சராக சுமார் 15 ஆண்டு காலம் பணியாற்றி உள்ள நிதிஷ்குமார், அம்மாநிலத்தில் நீண்ட காலம் முதலமைச்சராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 2015ம் ஆண்டு மெகா கூட்டணி சார்பில் முதலமைச்சரான நிதிஷ்குமார் 2017ல் திடீரென பா.ஜ.க கூட்டணிக்கு மாறினார். 5 ஆண்டுகளில் பா.ஜ.கவை கழற்றி விட்டு மீண்டும் மெகா கூட்டணியில் நிதிஷ்குமார் இணைந்துள்ளதால் பீகார் அரசியல் தேசிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்ற பெரிய கட்சிகளில் ஒன்றான ஐக்கிய ஜனதா தளம் வெளியேறியதால் பா.ஜ.கவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இது 2024 மக்களவை தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது..

Maha

Next Post

சமந்தாவை தற்போது சந்தித்தால் என்ன செய்வீர்கள்..? நாக சைதன்யா சொன்ன பதில்...

Wed Aug 10 , 2022
சமந்தாவும் நாக சைதன்யாவும் கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி ஒரு கூட்டறிக்கை மூலம் தங்கள் பிரிவை அறிவித்தனர். அவர்கள் தங்கள் விவாகரத்து குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டதிலிருந்து, அதைப் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.. கடந்த சில வாரங்களாக, நாக சைதன்யா, சமந்தா அளித்து வரும் நேர்காணல்களில் தங்களின் பிரிவைப் பற்றி பேசி வருகின்றனர். அந்த வகையில், காஃபி வித் கரண் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட […]
’என்னதான் இருந்தாலும் அது என்னோட Wife’..!! சமந்தாவை சந்தித்து பேசிய கணவர் நாக சைதன்யா..!!

You May Like