மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கஜாபுவா என்கிற பகுதியில் உள்ள இளம் பெண் ஒருவர் கடந்து எட்டு மாதங்களுக்கு முன்பு கணவரை விட்டு பிரிந்து அதே பகுதியைச் சேர்ந்த முகேஷ் என்பவருடன் வாழ்ந்து வந்துள்ளார். முகேஷ் உடன் நீண்ட காலமாக கள்ள உறவில் இருந்து வந்த அவர் கணவரை விட்டு பிரிந்து சென்று நிரந்தரமாக முகேஷுடன் குடித்தனம் நடத்தி வந்தார்.
இந்நிலையில் முகேஷை விட்டு பிரிந்து மீண்டும் தன் கணவரிடம் வந்து வாழ தொடங்கினார். தனது கள்ளக்காதலி தன்னை விட்டு பிரிந்து சென்ற ஆத்திரத்தில் தனது நன்பர்கள் ஐந்து பேரை உடன் அழைத்து சென்று அந்த பெண்ணை அழைத்துள்ளார். அப்போது அந்த பெண் முகேஷுடன் வர முடியாது என்று மறுத்து விட்டார். உடனே ஐந்து பேரும் சேர்ந்து அந்த பெண்ணை வீட்டில் இருந்து தரதரவென்று சாலைக்கு இழுத்து சென்றனர்.
அதன் பிறகு வலுக்கட்டாயமாக பைக்கில் அழைத்துச் செல்ல முயன்றனர். அதற்கு அந்த பெண் மறுத்ததால் அந்த பெண்ணை நடுரோட்டில் வைத்து அவரின் ஆடைகளை கிழித்து நிர்வாணப்படுத்தி, அடித்து உதைத்து கொடுமைப்படுத்தினர். இதை பார்த்த அங்கிருந்த அப்பெண்ணின் கணவரும் அவரது உறவினரும் இதை தடுக்க முயன்றனர், அவர்களையும் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
மேலும் அங்கிருந்த பொது மக்கள் இதைப்பார்த்தும் ஓடிவந்து தடுக்காமல் வேடிக்கை பார்த்தவிட்டு அதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்நிலையில் அந்த வீடியோ முன்னாள் முதல்வர் கமல்நாத் கவனத்திற்கு சென்றது. அவர் இது குறித்து காவல்துறையினரிடம், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். எனவே காவல்துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்டவர்கள் நான்கு பேரை கைது செய்துள்ளனர். மேலும் இரண்டு பேரை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.