உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் பாகிஸ்தானின் தேசியக் கொடியை தனது வீட்டில் ஏற்றியதற்காக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மாவட்டத்தின் தாரியா சுஜான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேடுபர் முஸ்தகில் என்ற கிராமத்தில் இருக்கும் ஒரு வீட்டில் நேற்று காலை 11 மணியளவில் பாகிஸ்தானின் தேசிய கொடியை ஏற்றியுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், வீட்டில் ஏற்றி இருந்த பாகிஸ்தான் தேசிய கொடியை அகற்றினர். மேலும், கொடியை ஏற்றிய சல்மான் மற்றும் கொடியை தயாரித்த அவரது அத்தை ஷானாஸ் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சல்மானை கைது செய்தனர்.