fbpx

’45-வது பிறந்தநாளை கொண்டாடிய வைகை எக்ஸ்பிரஸ்’..! ஊழியர்கள் கேக் வெட்டி மகிழ்ச்சி..!

மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கி, இன்றுடன் 45 ஆண்டுகள் நிறைவடைந்ததால், ரயில்வே ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

சென்னைக்கு மதுரையில் இருந்து புறப்படும் அதிவேக ரயிலான வைகை எக்ஸ்பிரஸ் 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இதேபோல சுதந்திர தின நன்னாளில் குறுகிய இருப்பு பாதையில் இயக்கப்பட்டது. இந்த ரயிலானது மதுரையில் இருந்து புறப்பட்டு திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விருத்தாச்சலம், செங்கல்பட்டு வழியாக சென்னை வந்தடையும். கிட்டத்தட்ட 8 மணி நேரத்திற்குள் மதுரை சந்திப்பில் இருந்து சென்னை வந்துவிடும்.

’45-வது பிறந்தநாளை கொண்டாடிய வைகை எக்ஸ்பிரஸ்’..! ஊழியர்கள் கேக் வெட்டி மகிழ்ச்சி..!

குறுகிய ரயில் இருப்பு பாதையில் இயங்கி வந்த ‘மதுரை புயல்’ வைகை எக்ஸ்பிரஸ் 1998ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதியில் இருந்து அகலப்பாதைக்கு மாற்றப்பட்டது. இந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கி 45ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து, ரயில்வே ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.

Chella

Next Post

வாக்குவாதத்தில் ஆரம்பித்த சண்டை கொலையில் முடிந்த கொடூரம்.. கத்திரிக்கோலால் குத்திய சக ஊழியர்..!

Mon Aug 15 , 2022
சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் 9-வது குறுக்குத்தெருவில் வசிப்பவர் சரவணன் (40). இவர், கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு கடையில் தையல்காரராக வேலை செய்து வந்தார். இவருடன் கோடம்பாக்கம் சிவன் கோவில் தெருவில் வசித்து வரும் மாதவன் என்பவரும் தையல்காரராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் கடையில் வேலை செய்து கொண்டிருந்த போது, சரவணன் சரியாக துணி தைக்கவில்லை என்று மாதவன் கூறியுள்ளார். தன்னை குறை கூறியது பிடிக்காமல் மாதவனுடன், சரவணன் […]
பைக்கில் சென்ற இளைஞரை சரமாரியாக வெட்டி தலையை மட்டும் எடுத்துச் சென்ற மர்ம கும்பல்..!! அதிரவைக்கும் சம்பவம்..!!

You May Like