fbpx

அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை வழக்கு..! அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்..!

அரும்பாக்கத்தில் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை வீட்டில் பதுக்கிய விவகாரத்தில், அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அரும்பாக்கம் பெடரல் வங்கியின் நகைக்கடன் பிரிவான பெட் வங்கியில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக அங்கு வேலைபார்த்த முருகன் அவனது கூட்டாளிகள் பாலாஜி, சந்தோஷ், சூர்யா உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். முதலில் வங்கியில் கொள்ளை போனது 20 கோடி ரூபாய் நகைகள் எனவும், பின்னர் கொள்ளையர்கள் பிடிபட்டதும் 32 கிலோ என்றும் காவல்துறையால் சொல்லப்பட்ட நிலையில், வங்கி நிர்வாகத் தரப்பில் மேலும் 3 கிலோ 700 கிராம் நகைகளை காணவில்லை என்று சொல்லப்பட்டதால் இந்த கொள்ளை வழக்கில் முதலில் சிக்கிய சந்தோஷ் என்பவரை காவலில் எடுத்து விசாரித்த போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை வழக்கு..! அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்..!

வங்கியில் கொள்ளையடித்த நகைகளை அதே பையுடன் பறிமுதல் செய்ததாக காவல்துறையினர் கூறிய நிலையில், 3 கிலோவுக்கு அதிகமான நகைகள் எங்கே பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிய கொள்ளையன் சந்தோஷ் தப்பிச்சென்ற நேரத்தில் செல்போனில் யார் யாருடன் பேசினான் என்பதை வைத்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனிப்படை போலீசாரிடம் தான் உண்மையை சொன்னா அவர் மீது நடவடிக்கை எடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்தால், சொல்கிறேன் எனக்கூற போலீசாரும் நடவடிக்கை எடுக்க மாட்டோன் என்று கூறியதை அடுத்து சந்தோஷ் தனது மனைவியின் சகோதரியான இந்திராவிடம் பேசி அவரது கணவரும் சகலைப்பாடியுமான அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜின் வீட்டில் நகைகளை மறைத்து வைத்திருப்பதாக கூறினார்.

அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை வழக்கு..! அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்..!

இதையடுத்து காவல் ஆய்வாளர் அமல்ராஜ், அவரது மனைவி இந்திரா ஆகியோரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்த தனிப்படை போலீசார், அவர்களது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3 கிலோ 700 கிராம் எடையுள்ள வங்கியில் கொள்ளை போன நகைகளை பறிமுதல் செய்தனர். கொள்ளை சம்பவத்தில் ஆய்வாளர் அமல்ராஜிற்கும் தொடர்புடைய தகவலை, காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறைக்கு தெரிவித்து விசாரிக்கும்படி சென்னை காவல்துறை கூறியுள்ளது. அதேநேரத்தில், ஆய்வாளர் அமல்ராஜ் மற்றும் அவரது மனைவி மெர்ஸிக்கு இந்த கொள்ளை சம்பவத்தில் எந்த மாதிரியான தொடர்பு உள்ளது என்பது குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜை சஸ்பெண்ட் செய்து காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்தியபிரியா உத்தரவிட்டுள்ளார்.

Chella

Next Post

மாத்திரை அட்டையில் திருமண அழைப்பிதழ்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

Fri Aug 19 , 2022
மாத்திரை அட்டை பின்பக்க வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள அழைப்பிதழ் ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலையில் உள்ள வெவ்வேறு தனியார் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்களுக்குத் திருமணம் முடிவாகியுள்ளது. அவர்கள் மருத்துவம் சார்ந்த துறையில் பணியாற்றுவதால் அந்த துறை சார்ந்து தங்களின் அழைப்பிதழை வடிவமைக்க முடிவு செய்துள்ளனர். அந்த வகையில், அந்த மாத்திரைக்கு எழில் வசந்தா எனப் பெயரிட்ட அந்த ஜோடி, மாத்திரை எங்கு உருவாக்கப்பட்டது யாரால் […]
மாத்திரை அட்டையில் திருமண அழைப்பிதழ்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

You May Like