fbpx

அண்ணன் தங்கை பிரச்சினை; தந்தை மகனை கடப்பாரையால் குத்தி கொன்ற சோகம்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகில் இருக்கும் எலியத்தூர் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் மயில் (50). இவர் கேரளாவில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருடைய முதல் மனைவி சந்திரா. இவர்களுக்கு சசிக்குமார் (27) என்ற மகன் இருக்கிறார். 25 வருடங்களுக்கு முன்பு சந்திரா இறந்து விட்டதால், வசந்தா என்பவரை மயில் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திவ்யா(23), தீபிகா(15) என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் திருமணம் ஆன திவ்யாவுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. எனவே அவர் எலியத்தூரில் உள்ள தனது தாய் வீட்டில் கைக்குழந்தையுடன் இருந்தார்.

இந்த நிலையில் சசிக்குமாருக்கும், திவ்யாவுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இந்த சமயத்தில் கேரளாவில் இருந்து மயில் வீட்டிற்கு வந்தார். அப்போதும், அண்ணன், தங்கை இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. எனவே இதை மயில் கண்டித்துள்ளார். இந்த நிலையில் மறுபடியும் அண்ணன், தங்கை இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மயில், சசிக்குமாரை கண்டித்துள்ளார். அப்போது தந்தை, மகனுக்கு இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. அப்போது மயில் வீட்டில் இருந்த கடப்பாரையால் மகன் சசிக்குமாரின் கண்ணில் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சசிக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கச்சிராயப்பாளையம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையிலான காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை செய்தனர். பிறகு சசிக்குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, மயிலை கைது செய்தனர். அண்ணன், தங்கை தகராறில் மகனை தந்தையே கொலை செய்த சம்பவம் கச்சிராயப்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rupa

Next Post

கொள்ளிடம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை; திருமணமான 6 மாதங்களில் நடந்த கொடூரம்..!

Thu Aug 25 , 2022
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகிகேயுள்ள மேலமாத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் கார்த்தி (30). கொத்தனார் வேலை பார்த்து வரும் இவருக்கும் பூம்புகார் கரைமேடு கிராமத்தைச் சேர்ந்த மோகனசுந்தரம் மகள் தர்ஷிகா (24) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் சீர்காழியில் திருமணம் நடந்தது. இந்தநிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த ஜூன் மாதம் 30-ஆம் தேதி மேலமாத்தூரில் இருக்கும் கார்த்தி வீட்டில் தர்ஷிகா மணவருத்தத்தில்‌ இருந்த போது உடலில் மண்எண்ணெய் ஊற்றி […]

You May Like