மற்ற கட்சிகளின் ஆட்சியை கவிழ்க்க பாஜக ரூ. 6,300 கோடி செலவிட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்த்துள்ளார்..
டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக மீது சரமாரி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.. மற்ற கட்சிகளின் அரசாங்கங்களை கவிழ்க்க பாஜக ரூ.6,300 கோடி செலவழிக்கவில்லை என்றால் உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி தேவையில்லை என்று அவர் விமர்சித்துள்ளார்..
தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் “ தயிர், மோர், தேன், கோதுமை, அரிசி போன்றவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 7500 கோடி வருமானம் வரும். இதுவரை 6300 கோடி செலவழித்து அரசுகளை கவிழ்த்துள்ளனர். இந்த அரசுகள் கவிழவில்லை என்றால். கோதுமை, அரிசி, மோர் போன்றவற்றுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டிருக்காது. மக்கள் பணவீக்கத்தை எதிர்கொள்ள வேண்டியதில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்..
முன்னதாக நேற்று டெல்லி சட்டசபையில் பேசிய அரவிந்த கெஜ்ரிவால் இன்றுவரை நாட்டில் பல அரசாங்கங்களை பாஜக கவிழ்த்துள்ளதாக கடுமையாக சாடினார்.. மேலும் “ நாட்டில் இன்றுவரை கோவா, கர்நாடகா, மகாராஷ்டிரா, அசாம், ம.பி., பீகார், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மற்றும் மேகாலயா போன்ற பல அரசாங்கங்களை அவர்கள் கவிழ்த்துள்ளனர். டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பாஜக 40 எம்எல்ஏக்களுக்கு லஞ்சம் கொடுத்து கட்சியில் இருந்து பிரிந்து செல்ல முயன்று வருகின்றனர்.. 40 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை குறிவைத்து கட்சி மாற தலா 20 கோடி ரூபாய் பாஜக வழங்கியது..
நாடு முழுவதும் 277 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு சென்றுள்ளனர் என்று கணக்கிட்டுள்ளோம், இப்போது ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் ரூ.20 கோடி கொடுத்தால் ரூ.5,500 கோடிக்கு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியுள்ளனர். அதனால் தான் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் பணத்தை அவர்கள் சாமானியர்களுக்கு பயன்படுத்த வேண்டும்..” என்று கூறினார்..