வங்கியில் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஆய்வாளர் அமல்ராஜுக்கு ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சென்னை அரும்பாக்கம் தனியார் நகைக் கடன் வங்கி ஒன்றில் ஆகஸ்ட் 13ம் தேதி தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர் அதே வங்கியில் பணியாற்றிய முருகன் என்பவர் தனது கூட்டாளிகளுடன் இணைந்து நகைக் கொள்ளையில் ஈடுபட்டனர் என்பதை கண்டறிந்தனர். இதையடுத்து சூர்யா, சந்தோஷ் பாலாஜி , செந்தில்குமார் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். இவர்களில் சந்தோஷ் என்பவரின் உறவினரான அமல்ராஜ் காவல்துறை ஆய்வாளராவார்.
இவருக்கும் இந்த கொள்ளையில் தொடர்பு இருந்தது பின்னர் தெரியவந்தது. கொள்ளையடித்த நகைகளை மறைத்து வைக்க இவர் உதவி செய்துள்ளார். இதையறிந்த காவல்துறையினர்கையும் களவுமாக பிடித்து சிறையில் அடைத்தனர்.
இவர் தனக்கு ஜாமீன் வேண்டும் என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறையினர் தரப்பில் இவருக்கு ஜாமீன் தரக்கூடாது என தெரிவித்தனர். விசாரித்த முதன்மை நீதிமன்ற நீதிபதிகள் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.