fbpx

”இந்த கதாபாத்திரத்தை எனக்கு தர கேட்டேன்”..! ஆனால்..! ரஜினி பகிர்ந்த சுவாரஸ்யம்..!

‘பொன்னியின் செல்வன்’ திரைப்பட இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்பு பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் தான் நடிக்க கேட்டபோது இயக்குநர் மணிரத்னம் மறுத்துவிட்டதாக சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

”இந்த கதாபாத்திரத்தை எனக்கு தர கேட்டேன்”..! ஆனால்..! ரஜினி பகிர்ந்த சுவாரஸ்யம்..!

விழாவில் பேசிய ரஜினி, “இந்த நிகழ்வுக்கு என்னுடைய வாழ்த்துகள். கமலின் ‘விக்ரம்’ படம் வெற்றி பெற்றதற்கு அவருக்கும் வாழ்த்துகள். இந்த விழாவில் 3 கதாநாயகர்கள். ஒன்று அமரர் கல்கி அவர்கள், இரண்டாவது தயாரிப்பாளர் சுபாஷ்கரன், மூன்றாவது இயக்குநர் மணிரத்னம். 70 ஆண்டுக்கு முன் எழுதப்பட்டது, ஐந்தரை ஆண்டுகளாக தொடராக வந்தது ‘பொன்னியின் செல்வன்’. வாராவாரம் வெளியாகும் இந்த தொடரைப் படிக்க, ஃபர்ஸ்ட் ஷோ படம் பார்க்க போகும் ஆவலுடன் காத்திருப்பார்கள் வாசகர்கள். இந்தப் படம் பலரும் முயன்று எடுக்க முடியவில்லை. அதற்கான காரணம் என்ன என்று யோசிப்பேன். ஒரே படத்தில் முழுக் கதையும் சொல்லும் சவால் இருந்தது எனத் தோன்றும். ஆனால், அந்த சவாலை மணிரத்னம் சாதனையாக மாற்றி இருக்கிறார்.

”இந்த கதாபாத்திரத்தை எனக்கு தர கேட்டேன்”..! ஆனால்..! ரஜினி பகிர்ந்த சுவாரஸ்யம்..!

மணிரத்னம் என்றவுடன் எனக்கு ‘தளபதி’யில் நடித்த நினைவுகள் வருகிறது. அந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின் போது, எனக்கு மேக்கப் போட வேண்டாம் எனக் கூறியிருந்தார். ஆனால், என்னுடன் இணைந்து நடிக்கப் போவது மம்மூட்டி. நல்ல கலரான நடிகர். அவர் உடன் நிற்கும் போது என்னுடைய முகம் தெரியாமல் போய்விடும். அந்த பயத்தில் மேக்கப் போட சொன்னேன். அவர்கள் கொடுத்த காஸ்ட்யூம், செருப்பு எதையும் போடாமல், ஷூ ஸ்டைலான காஸ்ட்யூம் அணிந்து சென்றேன். ஷூட் துவங்காமல் எல்லோரும் குழுவாக நின்று மணிரத்னத்துடன் பேசிக் கொண்டிருந்தார்கள். நான் என்ன பேசுகிறார்கள் எனக் கேட்டேன். உங்களுக்கு பதிலாக கமலை நடிக்க வைக்கலாம் எனப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்கள். அடுத்த நாளில் இருந்து நான் மேக்கப் போடுவதில்லை.

நடிப்பை பொருத்தவரை ஸ்டாக் ஆக்டிங், காதல், நட்பு, பாசம் என டிஃபால்ட்டாக ஒரு நடிப்பு என்னிடம் இருக்கும். வழக்கம் போல் அதே நடிப்பை இதில் வெளிப்படுத்த, மணிரத்னம் எதையும் ஓகே செய்யாமல் டேக் எடுத்துக் கொண்டே இருந்தார். நான் கமலுக்கு போன் போட்டு விஷயத்தை சொன்னேன். அவர் சிரித்துக் கொண்டே “எனக்குத் தெரியும் இப்படி நடக்கும் என்று. நீங்கள் மணிரத்னத்தை நடித்துக் காட்ட சொல்லி, கொஞ்ச நேரம் யோசிப்பதைப் போல இருந்து விட்டு மணி செய்ததை அப்படியே செய்யுங்கள். ஓகே ஆகிவிடும்” என்றார். இப்படித்தான் நானும் கமலும் மணிரத்னத்தை ஏமாற்றினோம்.

‘பொன்னியின் செல்வன்’ என்றதும் எனக்கு ஒரு குட்டி கதை ஞாபகம் வருகிறது. எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டு. ஆனால், எதுவாக இருந்தாலும் எத்தனை பக்கம் எனக் தெரிந்து கொள்ள விரும்புவேன். ‘பொன்னியின் செல்வன்’ வந்த காலகட்டத்தில், அதைப் படித்தீர்களா, படித்தீர்களா எனப் பலரும் என்னிடம் கேட்டார்கள். நானும் படிக்கலாம் என விரும்பி வழக்கம் போல் எத்தனை பக்கம் என்று கேட்டேன். பக்கமா அது ஐந்து பாகங்கள், 2000 பக்கங்களுக்கு மேல் என்றார்கள். முன்பெல்லாம் அரசு பதில்கள் என்ற பகுதி வரும். அதில் ஒரு வாசகர் பொன்னியின் செல்வனைப் படமாக எடுத்தால் யாரை வந்தியத் தேவனாக நடிக்க வைக்கலாம் எனக் கேட்டிருந்தார். அப்போது அந்தப் பகுதிக்கான பதிலை எழுதிய ஜெயலலிதா, ரஜினி என சொல்லியிருந்தார். பிறகு நான் பொன்னியின் செல்வன் படித்த பின்பு யாரெல்லாம் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என ஒரு யோசனையும் செய்தேன். நான் வந்தியத்தேவன், நந்தினி – ரேகா, குந்தவை – ஸ்ரீதேவி, பழுவேட்டரையர் – சத்யராஜ், ஆதித்ய கரிகாலன் – விஜயகாந்த் என ஒரு யோசனை. ஆனால், அது நடக்கவில்லை.

உண்மையில் பொன்னியின் செல்வனில் முதன்மைக் கதாபாத்திரம் என்பது அருள் மொழி வர்மன் கிடையாது, நந்தினி. இது பொன்னியின் செல்வி என்றுதான் இருந்திருக்க வேண்டும். அற்புதமான கதாபாத்திரம். நந்தினி இன்ஸ்பிரேஷனில் தான் நீலாம்பரி கதாப்பாத்திரத்தை படையப்பாவில் வைத்தேன். இந்தப் படத்தை மணிரத்னம் துவங்கும்போது படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தை எனக்குக் கொடுங்கள் எனக் கேட்டேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார்”. இவ்வாறு அவர் பேசினார்.

Chella

Next Post

திருமணமான ஐந்தே நாளில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..! ஓடையில் கிடந்த சடலம்..! பகீர் சம்பவம்..!

Wed Sep 7 , 2022
கடையம் அருகே திருமணமான 5 நாட்களில் புதுமணப்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் கடையம் அருகே துப்பாக்குடி ஊருக்கு சற்று தொலைவில் உள்ள ஒரு ஓடையில் நேற்றிரவு இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுமார் 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் […]
திருமணமான ஐந்தே நாளில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..! ஓடையில் கிடந்த சடலம்..! பகீர் சம்பவம்..!

You May Like