fbpx

ஜி ஸ்கொயர் நிறுவனம்..! சவுக்கு சங்கருக்கு தடை..! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனம் குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட சவுக்கு சங்கருக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தங்கள் நிறுவனம் குறித்து சவுக்கு சங்கர், பல்வேறு சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக அவதூறு கருத்துக்களை வெளியிட்டு வருவதால், அதற்கு தடை விதிக்கக் கோரி தென்னிந்தியாவைச் சேர்ந்த ஜி ஸ்கொயர் என்கிற கட்டுமான நிறுவனம் சார்பில் என்.விவேகானந்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், சவுக்கு சங்கரின் அவதூறு கருத்துகள் காரணமாக, தங்களது நிறுவனத்தில் முன்பதிவு செய்திருந்த வாடிக்கையாளர்களில் 28 பேர், முன்பதிவை ரத்து செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனால், சுமார் ரூ.15 கோடியை திரும்ப அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் தங்களுக்கு இதுபோன்ற பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதில்லை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதனால், மான நஷ்டஈடாக ஒரு கோடியே பத்தாயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஜி ஸ்கொயர் நிறுவனம்..! சவுக்கு சங்கருக்கு தடை..! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, எந்தவித அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் தொடர்ச்சியாக ஜி ஸ்கொயர் நிறுவனம் குறித்தும், தொழில் குறித்தும் சவுக்கு சங்கர் அவதூறாகப் பேசி வருவதாக அந்நிறுவனத்தின் சார்பில் வாதிடப்பட்டது. மேலும், பொள்ளாச்சியில் தங்களது நிறுவனத்திற்கு எந்த திட்டமும் இல்லாத நிலையில் முதலமைச்சர் பயணத்தை தங்களது நிறுவனத்துடன் தொடர்புபடுத்தி சவுக்கு சங்கர் பேசியிருப்பதாகவும் அந்நிறுவனம் வாதிட்டது. இந்த வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி கார்த்திகேயன், ஜி ஸ்கொயர் நிறுவனம் குறித்து பேச சவுக்கு சங்கருக்கு தடை விதித்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி சவுக்கு சங்கருக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Chella

Next Post

சூர்யா-சிறுத்தை சிவா கூட்டணி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..! வெளியான மாஸ் அப்டேட்..!

Thu Sep 8 , 2022
சூர்யா – சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் நாளை வெளியாகிறது. கடந்த சில வாரங்களாக சூர்யா – சிறுத்தை சிவா கூட்டணி பற்றித்தான் கோலிவுட் முழுக்க பேச்சாக இருந்தது வருகிறது. இதுகுறித்த அறிவிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வந்த நிலையில், சில காரணங்களால் இப்படம் தள்ளிப்போனது. படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் இருந்த நிலையில், அதற்குப் பதில் அளிக்கும் […]
சூர்யா-சிறுத்தை சிவா கூட்டணி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..! வெளியான மாஸ் அப்டேட்..!

You May Like