fbpx

ஆன்லைன் ரம்மிக்கு தடையா..? தமிழக அரசு பரபரப்பு மனு..! சுப்ரீம் கோர்ட் முக்கிய அறிவிப்பு..!

ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜங்லி கேம்ஸ், பிளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், தமிழக அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டம், அரசியல் சாசனத்துக்கு விரோதமானது எனவும், போதுமான காரணங்களை விளக்கவில்லை எனக்கூறி, சட்டத்தை ரத்து செய்தது. மேலும், உரிய விதிகளுடன் புதிய சட்டம் கொண்டுவர அரசுக்கு எந்த தடையும் இல்லை எனவும் தீர்ப்பளித்தது.

ஆன்லைன் ரம்மிக்கு தடையா..? தமிழக அரசு பரபரப்பு மனு..! சுப்ரீம் கோர்ட் முக்கிய அறிவிப்பு..!

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் வக்கீல் ஜோசப் அரிஸ்டாட்டில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் தமிழக அரசின் சட்டத்தை முறையாக பரிசீலிக்காமல் சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. இதுபோன்ற சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. எனவே, ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்டத்தை ரத்து செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இதுதொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை நாளை (வெள்ளிக்கிழமை) விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

Chella

Next Post

3-ம் பாலினத்தவருக்கு பாகுபாடு இல்லாமல் வேலைவாய்ப்பு.. உச்சநீதிமன்றம் அதிரடி..

Thu Sep 8 , 2022
3-ம் பாலினத்தவருக்கு பாகுபாடு இல்லாமல் வேலைவாய்ப்பு வழங்க நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.. ஏர் இந்தியா நிறுவனத்தில் விமான பணிப்பெண் பணிக்கு விண்ணப்பித்த நிலையில், அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது எதிர்த்து தமிழகத்தை சேர்ந்த ஷானவி பொன்னுசாமி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.. திருநங்கை என்ற ஒரே காரணத்திற்காக தனக்கு வேலை மறுக்கப்பட்டதாகவும், இது தனக்கு இழைக்கப்பட்ட பாகுபாடு என்று கூறி முறையிட்டிருந்தார்.. இந்நிலையில் இந்த வழக்கு […]

You May Like