fbpx

ஆவலுடன் காத்திருந்த ’நானே வருவேன்’ டீசர்..! தயாரிப்பாளர் எஸ்.தாணு மாஸான அறிவிப்பு..!

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகிறது.

மாறன், திருச்சிற்றம்பலம் திரைப்படங்களைத் தொடர்ந்து தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ’நானே வருவேன்’. செல்வராகவனின் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் எல்லி அவரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், அரவிந்த் கிருஷ்ணா படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்ளவுள்ளார். மேலும், கலைப்புலி எஸ் தாணு படத்தை தயாரிக்கவுள்ளார்.

ஆவலுடன் காத்திருந்த ’நானே வருவேன்’ டீசர்..! தயாரிப்பாளர் எஸ்.தாணு மாஸான அறிவிப்பு..!

புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களில் தனுஷ் -செல்வராகவன் கூட்டணி சிறப்பாக அமைந்த நிலையில், தற்போது ’நானே வருவேன்’ படத்திற்கும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியானது. இதனை கலைப்புலி எஸ்.தாணு தனது சமூக வலைதளப்பக்கத்தில் ”’எண்ணியது எண்ணியபடி, சொன்னது சொல்லியபடி’ செப்டம்பர் மாதம் வெளியீடு என தெரிவித்துள்ளார். நீங்கள் ஆவலுடன் காத்திருந்த ‘நானே வருவேன்’ படத்தின் டீசர் வரும் 15ஆம் தேதி வெளியிடப்படும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Chella

Next Post

ராணி எலிசபெத் இறுதி நிகழ்வு.. இந்த 3 நாடுகளுக்கு மட்டும் பிரிட்டன் அழைப்பு விடுக்கவில்லை..

Wed Sep 14 , 2022
ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி நிகழ்வுக்கு ரஷ்யா, பெலாரஸ், மியான்மர் ஆகிய மூன்று நாடுகளுக்கு பிரிட்டன் அழைப்பு விடுக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.. கடந்த 70 ஆண்டுகளாக பிரிட்டனின் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத், கடந்த 8 ஆம் தேதி தனது 96 வயதில் ஸ்காட்லாந்தில் மரணமடைந்தார். ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் வரும் 19-ம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் ராணியின் […]
ராணி எலிசபெத்தின் உயில்..! 90 ஆண்டுகளுக்கு சீல்..! ஆச்சர்யமூட்டும் தகவல்கள்..!

You May Like