கட்டிட அனுமதி விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக மட்டுமே பெற்று அனுமதி அளிக்கும் நடைமுறையை அமல் படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் அவர்களின் 2022-2023 நிதி நிலை அறிக்கையில் திட்ட அனுமதி, கட்டடம் கட்டுதல் மற்றும் மனைகள் ஆகியவற்றிற்கு ஒப்புதல் வழங்கும் நடைமுறையை துரிதப்படுத்துவதற்காக மாநில முழுமைக்கும் ஒற்றைச்சாளர முறை இந்த ஆண்டில் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டதற்கிணங்க, மனைப்பிரிவு உத்தேசங்கள் இணையதளம் மூலமாக பெறப்பட்டு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து தற்போது, அனைத்து மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகங்கள் கட்டிட உத்தேச அனுமதி மற்றும் நிலஉபயோக மாற்றம் குறித்த உத்தேச விண்ணப்பங்களை ன இணையதளம் மூலமாக மட்டுமே பெற்று அனுமதி அளிக்கும் முறையினை நடைமுறைப்படுத்துமாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.