fbpx

2 பூரண சந்திரன்கள்..! குந்தவையுடன் செல்ஃபி எடுத்த நந்தினி… க்யூட் போட்டோ வைரல்..

சோழர்களின் வரலாற்றை பேசும், பீரீயாடிக்கல் – ஆக்‌ஷன் படமாக இப்படம் உருவாகி வருகிறது.. மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி அருள்மொழி வர்மனாகவும், விக்ரம் ஆதித்த கரிகாலனாகவும், கார்த்தி வந்தியத்தேவனாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினி, மந்தாகினி என 2 வேடங்களிலும், த்ரிஷா குந்தவையாகவும், சரத்குமார் பெரிய பழுவேட்டரையாகவும் நடிக்க உள்ளனர்.. இப்படத்திற்காக ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளனர்..

சூப்பர் அப்டேட்..!! 'பொன்னியின் செல்வன் பாகம் 2' எப்போது ரிலீஸ் தெரியுமா?

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் வரும் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.. ஐமேக்ஸ் வடிவத்தில் வெளியாகும் முதல் தமிழ்ப் படமாக பொன்னியின் செல்வன் படம் வெளியாக உள்ளது.. சமீபத்தில், பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இந்த வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கலந்து கொண்டனர்.

”இந்த கதாபாத்திரத்தை எனக்கு தர கேட்டேன்”..! ஆனால்..! ரஜினி பகிர்ந்த சுவாரஸ்யம்..!

இப்படத்தின் டீசர், ட்ரெய்லர், பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்குக் நாள் அதிகரித்து வருகிறது.. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் புரோமஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.. ஹைதராபாத், கேரளா, கர்நாடகா, மும்பை, டெல்லி என நாட்டின் முக்கிய நகரங்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்..

இந்நிலையில் பொன்னியின் செல்வன் முக்கியமான பெண் காத்திரங்களான நந்தினியும், குந்தவையும் ஒன்றாக இருக்கும் செல்ஃபி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.. பொன்னியின் செல்வன் கதையை பொறுத்த வரை நந்தினியும் குந்தவை எதிரிகள்.. குந்தவைக்கு எதிராக நந்தினியும், நந்தினியும் எதிராக குந்தவையும் திட்டம் போட்டு காய்களை நகர்த்தி வருவார்கள்..

இதனிடையே சமீபத்தில் நடந்த பொன்னியின் செல்வன் பட புரோமஷன் நிகழ்ச்சியில் பேசிய த்ரிஷா, சுவாரஸ்ய தகவலை கூறியிருந்தார்.. படப்பிடிப்பின் போது, என்னையும், ஐஸ்வர்யா ராயையும் மணி ரத்னம் பேச அனுமதிக்க மாட்டார்.. கதைப்படி நாங்கள் இருவரும் எதிரிகள் என்பதால் தான் அவர் எங்களை பேச விடமாட்டார்.. ஆனால் திரையில் மட்டுமே நாங்கள் இருவரும் எதிரிகள்.. திரைக்கு பின்னால் நாங்கள் நல்ல தோழிகள்..” என்று கூறியுள்ளார்..

Maha

Next Post

சிறுமி பலாத்காரம்..! கையில் ரூ.100 மற்றும் சிப்ஸ் பாக்கெட்டை கொடுத்து வீட்டிற்கு அனுப்பிய உறவினர்..!

Fri Sep 23 , 2022
சிறுமியை பலாத்காரம் செய்து கையில் 100 ரூபாயும், ஒரு சிப்ஸ் பாக்கெட்டையும் கொடுத்து அனுப்பிய உறவினருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, 100 ரூபாய் பணத்தையும், ஒரு சிப்ஸ் பாக்கெட்டையும் அந்த சிறுமியின் கையில் கொடுத்து வீட்டிற்கு அனுப்பிய காமக்கொடூரனை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில், அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது அவரது நெருங்கிய […]

You May Like