fbpx

’ஓபிஎஸ் உடன் பேசி பல வருஷம் ஆச்சு’..!! ’அப்போ அது என்னாச்சு’..? டிடிவி தினகரன் திடீர் பல்டி..?

ஓபிஎஸ் உடன் இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், ”நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமரை தேர்வு செய்ய அணிலைப் போல் செயல்படுவோம். காங்கிரஸ், பாஜக ஆகிய தேசிய கட்சிகள் தான் உள்ளன. யாருடன் கூட்டணி என்பது அப்போது முடிவு செய்து அறிவிக்கப்படும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி நடைபெற்றது. அதில், எடப்பாடி பழனிசாமி செய்த திருவிளையாடலால் தற்போது திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. பொய் வாக்குறுதிகள் அளித்து ஆட்சிக்கு வந்த திமுகவின் சாயமும் வெளுத்து வருகிறது. அமைச்சர்களின் ஆணவப் பேச்சு, ஸ்டாலின் குடும்பத்தின் ஆதிக்கம் அனைத்திற்கும் மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.

’ஓபிஎஸ் உடன் பேசி பல வருஷம் ஆச்சு’..!! ’அப்போ அது என்னாச்சு’..? டிடிவி தினகரன் திடீர் பல்டி..?

ஓபிஎஸ் உடன் பேசி பல வருடங்கள் ஆகின்றன. அதேபோல் அதிமுகவினர் என்னோடு பேசுவதை அரசியலாக பார்க்க வேண்டாம். அரசியல் வேறு பழக்க வழக்கம் வேறு. நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் நடக்குமா? என்ற கேள்விக்கு, என்ஐஏ சோதனை, இறையாண்மைக்கு எதிராக பேசுவது, ஆயுதங்களை கையகப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை பார்க்கும் போது தமிழகத்தில் 2024ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது” என்று பதிலளித்தார்.

Chella

Next Post

இந்தியாவின் ஆன்மாவாக ஆன்மீகம் திகழ்கிறது; ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்..!!

Fri Sep 30 , 2022
நாகூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத், இலங்கை, மாலத்தீவு போன்ற நாடுகள் கஷ்டத்தில் இருந்தபோது இந்தியா மட்டுமே அவர்களுக்கு உதவியது என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசினார். நாக்பூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியதாவது;- ஆன்மிகம் இந்தியாவின் ஆன்மாவாக உள்ளது. இந்தியா தனது சொந்த வாழ்க்கையின் மூலம் ஆன்மிகத்தின் அடிப்படையில் […]

You May Like