fbpx

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த வாலிபர்..!! மன உளைச்சலில் எடுத்த விபரீத முடிவு..!!

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஸ்ரீவைகுண்ட பெருமாள்புரம் கிராமத்தில் வசித்து வந்தவர் பூபதி ராஜா (28). டிப்ளமோ முடித்துள்ள இவர், தனியார் பவர் பிளாண்டில் பகுதி நேர ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஆன்லைன் ரம்மியில் சூதாடும் பழக்கம் இருந்து வந்துள்ளது. தமிழ்நாட்டில் தடை செய்யப்படுவதற்கு முன், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிகமான பணத்தை இழந்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, பூபதிராஜா கடந்த சில நாட்களாகவே சோகமாக இருந்து வந்துள்ளார். இதனால் அவரை பெற்றோர் கண்டித்து உள்ளனர்.

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த வாலிபர்..!! மன உளைச்சலில் எடுத்த விபரீத முடிவு..!!

இதில், மனமுடைந்த பூபதிராஜா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குளத்தூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத சோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் ரம்மியால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

வடகிழக்கு பருவமழை 3 நாளில் தொடங்குகின்றது!!!

Wed Oct 26 , 2022
தமிழகம் மற்றும் ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29ம் தேதி தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகின்றது. இதனால் இன்றும் , நாளையும் , தமிழகம் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.28.10.2022 தமிழ்நாடு , புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் […]

You May Like