சன்நியூஸ் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பின்னர் பிரபலமாகி பிக்பாஸ் போட்டியாளராக அனைவரையும் ஈர்த்தவர் சீரியலில் களமிறங்க உள்ளாராம்.
சன்நியூஸ் பிரைம் டைம் செய்தி வாசிப்பாளராக பிரபலமானவர் அனிதா சம்பத். இவரது உடை மற்றும் அலங்காரம், செய்தி வாசிப்பின் நலிணம் போன்றவற்றால் அனைவரையும் ஈர்த்தவர். பிக்பாஸ் சீசன் 4-ல் போட்டியாளராக வீட்டுக்குள் நுழைந்ததன் மூலம் இன்னும் பிரபலமானார்.
பின்னர் எந்த நிகழ்ச்சிக்கும் செல்லாமல் இருந்தார். எனினும் யூடியூப் ஒன்றை நடத்தி வரும் இவர் அதில் பிசியாக இருந்தார். இவரது தந்தை இறந்ததை அடுத்து சோகத்தில் இருந்தார். பின்னர் அதில் இருந்து படிப்படியாக வெளியேறி யூடியூப் கன்டெட்களை பதிவேற்றி வந்தார். அவரது தொடர் முயற்சியால் வீடு வாங்கி கிரகப்பிரவேசமும் செய்தார்.
இந்நிலையில் சீரியலில் களம் இறங்கப்போவதாக தகவல்கள் வெளியானது. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ’மந்திரப் புன்னகை’ என்ற விறுவிறுப்பான சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் அனிதா சம்பத் நடித்து வருகின்றாராம். இவருக்காகவே சீரியலை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றார்களாம்.