நகர வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு போனாலும் உடல் நலனை பாதுகாக்க வேண்டியது அவசியமாக உள்ளது. இந்த சூழ்நிலையில், பச்சை காய்கறிகள் மிகவும் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும் அவை எந்த அளவுக்கு பயனுள்ளதாகவும் இருக்கும என்றும், எந்தெந்த காய்கறிகளை நீங்கள் உட்கொள்ள வேண்டும் என்றும் இங்கே அறிந்து கொள்வோம்.
பச்சை காய்கறிகளை உட்கொள்வதால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. மேலும், கொழுப்பு மற்றும் எடை அதிகரிப்பு என பல நோய்கள் இருந்து வரும் நிலையில், எடையை குறைக்க, பச்சை காய்கறிகள் மிகவும் உதவியாக உள்ளது.
பலருக்கும் சரும பிரச்சனை மற்றும் தோள்களை பற்றி அதிக கவலை இருந்து வரும். பச்சை காய்கறிகள் உண்பது சருமத்திற்கும் மற்றும் கூந்தலுக்கும் மிகவும் நன்மை அளிக்கிறது. ஏனெனில் இவற்றில் வைட்டமின்கள், தாதுக்கள் ஆகியவை நிறைந்துள்ளதால், உடலில் உள்ள கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் , சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது.
வெள்ளரிக்காய் எல்லா நாட்களிலும் எளிதில் கிடைக்க கூடிய ஒன்று.வெள்ளரி சாப்பிடுவதற்காக சில நேரங்கள் உண்டு, அதாவது மதிய உணவு அல்லது இரவு உணவுக்கு எடுத்து கொள்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக எடுத்து கொள்ள வேண்டும். பச்சை காய்கறிகள் மற்றும் சாலட்களை எப்போதும் உணவுடன் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.