fbpx

9 வயது சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்த சிறுவன்..!! பிளேடால் அறுத்த கொடூரம்..!!

9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து பிளேடால் கழுத்தை அறுத்துக் கொலை செய்த வழக்கில் 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் ரயில் நிலையம் அருகே 9 வயது சிறுமியின் சடலம் அரை நிர்வாண நிலையில், கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது, அதே பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் இருந்தது தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில், 15 வயது சிறுவனை விசாரணை மேற்கொள்ள அவரது குடியிருப்பு பகுதிக்கு சென்றனர்.

9 வயது சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்த சிறுவன்..!! பிளேடால் அறுத்த கொடூரம்..!!

அப்போது சிறுவனின் பதில் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்ததால் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சில நாட்களுக்கு முன்பு சிறுமியின் தந்தைக்கும், சிறுவனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சிறுமியின் தந்தை சிறுவனை தாக்கியுள்ளார். இதனால் கடும் கோபத்தில் இருந்த அந்த சிறுவன், அவரை பழிவாங்க மகளை கொலை செய்ய திட்டமிட்டுள்ளான். சம்பவத்தன்று சிறுமியை கடத்தி, ஆள் இல்லாத இடத்திற்கு கொண்டு சென்று, அங்கு வைத்து சிறுமியை பலாத்காரம் செய்துள்ளான். மேலும், இதை வெளியில் சொல்லிவிடுவார் என்ற பயத்தில் தான் வைத்திருந்த பிளேடை கொண்டு அவரது கழுத்தை அறுத்துள்ளார். இதையடுத்து, பாலியல் வன்கொடுமை, கொலை, போக்சோ உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.

Chella

Next Post

டிரக்கில் சிக்கிய இளைஞர் தரதரவென்று இழுத்து சென்றதால் உயிர் போன பரிதாபம்..!

Sun Dec 4 , 2022
இந்தியாவை சேர்ந்த கார்த்திக் சைனி என்ற மாணவர் கனடாவில் உள்ள ரொறன்ரோவில் சென்ற 23ஆம் தேதி சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பிக் அப் டிரக் சைக்கிள் மீது மோதியதில் கார்த்திக் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அத்துடன் அவர் தரதரவென வண்டியுடனே இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் […]

You May Like