fbpx

நடுவானில் தெருச் சண்டை..!! தெறித்து ஓடிய பயணிகள்..!! வைரலாகும் வீடியோ உள்ளே..!!

பேருந்துகள், ரயில்கள் போன்ற பொது போக்குவரத்துகளில் அவ்வப்போது பொதுமக்கள் சண்டையிடுவது, தகராறு செய்வதை அறிந்திருப்போம். ஆனால், நடுவானில் பறந்துக் கொண்டிருக்கும் விமானத்தில் சண்டையிட்டு சலசலப்பை ஏற்படுத்துவதெல்லாம் அரிதான நிகழ்வாகவே இருக்கும். அப்படியான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் சக பயணியிடம் சண்டையிட்டிருக்கிறார். அவரது சச்சரவை கண்ட மற்ற பயணிகள் அவரை சமாதானம் செய்திருக்கிறார்கள். இருப்பினும் தொடர்ந்து கத்தியிருக்கிறார். வெறும் 12 விநாடிகள் மட்டுமே ஓடக்கூடிய அந்த வீடியோவில், “நான் பேசும் போது யாரும் பேசுறது இல்லை. நான் சொல்றேன் இது மாதிரிலாம் என்கிட்ட பேசாதீங்க. உங்களுக்குளாம் நான் யாருனு தெரியாது” என ஆவேசமாக பேசியுள்ளார். அந்த இளைஞரின் ஆவேச பேச்சை அடுத்து பலரும் அவரை அமரச் சொல்கிறார்கள். மேலும், இப்படியெல்லாம் விமானத்தில் பறக்கும் போது தொண்டையை கிழித்துக் கொண்டு கத்த வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார்கள்.

இந்த வீடியோ முதலில் Being Aviator என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே முதலில் பகிரப்பட்டிருக்கிறது. பழைய வீடியோவாக இருந்தாலும் அண்மையில் McAdams என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததை அடுத்து நெட்டிசன்களின் கவனத்தை பெற்றிருக்கிறது. அந்த வீடியோவிலேயே “தெருச் சண்டைகள் ஆகாயம் வரை கொண்டு செல்லப்பட்டிருக்கிறது” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Chella

Next Post

கோவிலில் உறங்கிக் கொண்டிருந்த பூசாரி எரித்துக் கொலை! நள்ளிரவில் துணிகரம் திருப்பூர் அருகே பரபரப்பு!

Sun Dec 18 , 2022
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கூட கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் தற்போதைய அளவிற்கு நடைபெறவில்லை.ஆனால் தற்போது நிமிடத்திற்கு நிமிடம் கொலை, கொள்ளை, பலாத்காரம் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. அதிலும் போதை பொருள் பழக்கம் தமிழக இளைஞர்கள் இடையே அதிகரித்து வருகிறது. ஆனால் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் போதை பொருளை பயன்படுத்துபவர்களை கண்டறிந்து, போதை பொருள் பழக்கத்தை முற்றிலுமாக நிறுத்துவதற்கான நடவடிக்கை […]
மகனின் தலையில் அம்மிக் கல்லைப் போட்டு கொன்ற கொடூர தந்தை..! சண்டையில் தலையிட்டதால் சம்பவம்..!

You May Like