fbpx

நஷ்டத்தில் இயங்கும் பால் நிறுவனம்..!! 4 ரூபாய் அதிரடி உயர்வு..!! பொதுமக்கள் அதிருப்தி..!!

புதுச்சேரியில், அரசு நிறுவனமான பாண்லே நிறுவனம் பால் விலையை ரூ.4 வரை உயர்த்த முடிவு செய்துள்ளது.

புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான பாண்லே மூலம் பால் மற்றும் தயிர், மோர், நெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தரமாகவும், சலுகை விலையிலும் கிடைப்பதால் இந்த பொருட்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில், அரசு நிறுவனமான பாண்லே பால் விலையை உயர்த்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

நஷ்டத்தில் இயங்கும் பால் நிறுவனம்..!! 4 ரூபாய் அதிரடி உயர்வு..!! பொதுமக்கள் அதிருப்தி..!!

அதன்படி, தற்போது 44 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் ஒரு லிட்டர் பால், 4 ரூபாய் உயர்த்தி 48 ரூபாய்க்கு விற்பனை செய்ய புதுச்சேரி அரசு முடிவெடுத்துள்ளது. இதே போல், கொள்முதல் விலையும் லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தி 34-ல் இருந்து 37 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஓராண்டாக பாண்லே நிறுவனம் தொடர் நஷ்டத்தில் இயங்குவதால் அதனை ஈடுகட்ட பால் விலை உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

போதைக்கு அடிமையான மனைவி..!! ’போதும்டா சாமி’ என விவாகரத்து கேட்ட கணவர்..!! பின்னர் நடந்த சம்பவம்..!!

Wed Dec 28 , 2022
மனைவியின் கோமாளித்தனத்தால் மன உளைச்சலுக்கு ஆளான கணவர், விவாகரத்து கோரி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த இளைஞர், கட்கோராவைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்த நிலையில், திருமணமாகி 7 நாட்களுக்குப் பிறகு 26 மே 2015 அன்று காலை, அவரது மனைவி படுக்கையில் மயங்கிக் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் சிகிச்சைக்காக மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோது, அவர் மது அருந்தியதோடு அசைவம், குட்காவுக்கு […]

You May Like