புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி கூகுள் நிறுவனம் புதிய டூடுலை வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் மத்தியில் 2022ம் ஆண்டு இன்றுடன் விடைபெறும் நிலையில், புத்தாண்டை வரவேற்கவும், உற்சாகமாக கொண்டாடவும் உலக மக்கள் தயாராகி வருகிறார்கள். புத்தாண்டை வரவேற்க தமிழகம் முழுவதும் சுற்றுலாத் தலங்கள், ஹோட்டல்களில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்களில் கூகுள் நிறுவனம் அவ்வப்போது சிறப்பு டூடுலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இன்று இரவு 12 மணியுடன் 2022-ம் ஆண்டு நிறைவடைந்து 2023-வது புத்தாண்டு பிறக்க உள்ளது.
இந்த நிலையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளா கூகுளின் டூடுலை கிள்க் செய்தால், அந்த பக்கம் லோட் ஆன பின், புத்தாண்டை வரவேற்கும் விதமாக பல வண்ணங்களில் பாப்பிங் போன்று வெடித்து சிதறுகிறது. கணினி அல்லது மொபைல் ஸ்கிரீன்கள் முழுவதும் வெடித்துச்சிதறும். ஒருவேளை அந்த கலர்பேப்பர்கள் உங்களுக்கு போதவில்லை என்றால், கணினியின் தேடுபொறிக்கு இடதுபக்கமும், மொபைல் தேடுபொறிக்கு வலதுபக்கமும் இருக்கும் கோனை அழுத்தினால், உங்களுக்கு போதும் போதும் என்றளவு பல வண்ணங்களில் பாப்பிங் வந்துகொண்டே இருக்கும். நாமும் ட்ரை பண்ணி பார்க்கலாமா…