fbpx

தொடரும் சோகம்..!! மீண்டும் காவு வாங்கிய ஆன்லைன் ரம்மி..!! ரூ.15 லட்சம் வரை இழந்த இளைஞர் தற்கொலை..!!

ஆன்லைன் ரம்மியில் ரூ.15 லட்சம் வரை பணத்தை இழந்த இளைஞர், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் பனங்குடி அருகே ரோஸ்மியாபுரத்தைச் சேர்ந்தவர் சிவன்ராஜ். இவர், ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இந்த விளையாட்டிற்காக தனது பணம் முழுவதையும் இழந்த சிவன்ராஜ், மற்றவர்களிடம் கடன் வாங்கி விளையாடி உள்ளார். அதிலும், பணத்தை இழந்ததால், வேறு வழியின்றி சொத்துகளை விற்றும் வீட்டில் இருந்த பணத்தை எடுத்தும் ஆன்லைன் ரம்மி விளையாடியிருக்கிறார். இவர், செலவு செய்த பணம் எதுவும் திரும்ப கிடைக்கவில்லை. சுமார் ரூ.15 லட்சம் வரை பணத்தை இழந்ததாக கூறப்படும் நிலையில், விட்டதை பிடித்து விடலாம் என நினைத்து ஒருவரிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கி விளையாடி, அதிலும் பணத்தை இழந்துள்ளார்.

தொடரும் சோகம்..!! மீண்டும் காவு வாங்கிய ஆன்லைன் ரம்மி..!! ரூ.15 லட்சம் வரை இழந்த இளைஞர் தற்கொலை..!!

இதனால் மனமுடைந்த சிவன்ராஜ், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தற்கொலை செய்வதற்கு முன்னதாக தனது நண்பர்களை தொடர்பு கொண்ட அவர், ஆன்லைன் ரம்மியால் மொத்த பணத்தையும் இழந்து விட்டதால், பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி தருகிறார்கள். எனவே, நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியான ஒரு நண்பர்கள் வீட்டில் சென்று பார்த்த போது அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சிவன்ராஜின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Chella

Next Post

தாயின் அலட்சியத்தால் உயிரிழந்த 18 மாத கைக்குழந்தை…!

Wed Jan 11 , 2023
தற்போது மக்களிடையே அலட்சியம் அதிகரித்துவிட்டது. அந்த அலட்சியம் அதிகரிப்பால் பல துன்பங்கள் நேர்கின்றனர். அந்த துன்பங்கள் விவரம் அறிந்தவர்களுக்கும், தவறு செய்தவர்களுக்கும் நேர்ந்தால் கூட பரவாயில்லை என்று சொல்லலாம். ஆனால் அந்த தவறுகள் எதுவும் அறியாத பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறிப்பதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. யாரோ ஒரு சிலர் அலட்சியத்தால் செய்யும் ஒரு சில தவறுகளால், எதுவும் அறியாத பச்சிளம் குழந்தைகள் தங்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இழந்து […]

You May Like