fbpx

’தளபதி 67’ படத்தின் தரமான அப்டேட்..!! வில்லன் யார் தெரியுமா..? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ’தளபதி 67’ படத்தின் மெயின் வில்லன் யார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் தற்போது ’தளபதி 67’ பற்றி தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு காரணம், தளபதி 67 படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளது. நேற்று இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில், இன்று இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பை தொடர்ந்து வெளியிட உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். அந்த வகையில், தளபதி 67 படத்தின் மெயின் வில்லன் யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் சஞ்சய் தத் தான் தளபதி 67 படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளார் சஞ்சய் தத்.

இதுகுறித்த அறிவிப்பு போஸ்டரில், தளபதி 67 கதை கேட்டு சஞ்சய் தத் என்ன சொன்னார் என்பதை பதிவிட்டுள்ளனர். அதன்படி “தளபதி 67 படத்தின் ஒன் லைன் கேட்டதுமே இப்படத்தில் பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். இந்த பயணத்தை தொடங்க ஆவலோடு உள்ளேன்” என்று சஞ்சய் தத் கூறினாராம். நடிகர் சஞ்சய் தத் கடைசியாக பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எஃப் 2 படத்தில் ஆதீரா என்கிற கொடூரமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின் அவர் ’தளபதி 67’ படத்தில் இணைந்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், தளபதி 67 திரைப்படத்தில் பிரியா ஆனந்த் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Chella

Next Post

ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரம் இனி இதுதான்..!! முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி அறிவிப்பு..!!

Tue Jan 31 , 2023
ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரம் விசாகப்பட்டினம் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஒன்றுபட்ட ஆந்திர மாநிலம் பிரிவினைக்கு பின்பு தெலங்கானா, ஆந்திரா என இரண்டு மாநிலங்களாக உருவானது. இதையடுத்து, ஆந்திர மாநிலத்தின் தலைநகரமாக அமராவதி நகரத்தை அப்போதையை முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்திருந்தார். இத்தகைய சூழலில் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒய்எஸ்ஆர் கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார். அதன்பின்பு அமராவதியை […]

You May Like