தெலுங்கு திரையுலகில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ். இவர் பாகுபலி திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பின்னர் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா இருவரும் ஓர், இரண்டு படங்களில் ஜோடியாக நடித்ததன் மூலம் இவர்களுக்குள் காதல் மலர்ந்ததாக ஒரு செய்தி பரவியது. அதன் பிறகு இதை உறுதி செய்யும் வகையில் பாகுபலி படத்திற்குப் பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்துக் கொண்டிருந்தனர். இதை தெரிந்து கொண்ட இவர்களது ரசிகர்களும் இவர்கள் திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், அனுஷ்கா பேட்டி ஒன்றில், பிரபாஸ் எனக்கு நல்ல நண்பர் மட்டுமே என்று கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.
அதன்பிறகு இருவரும் ஜோடியாக சேர்ந்து படத்தில் நடிப்பதை விட்டு விட்டார்கள். பின்பு நீண்ட காலமாக டோலிவுட்டில் ஒரு பேச்சுலராக வலம் வந்து கொண்டிருந்த பிரபாஸ், தற்போது காதலில் சிக்கி உள்ளார். பிரபாஸ் நடிப்பில் வெளிவர இருக்கும் ஆதிபுருஷ் படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த கீர்த்தி சனோன் உடன் காதல் மலர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் பிரபாஸ் ராமராகவும் கீர்த்தி சனோன் சீதையாகவும் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் ஆதிபுருஷ் படத்தில் நடிக்கும் போது தான் தங்களது காதலை வெளிப்படுத்தி உள்ளனர். இதை தெரிந்து கொண்ட சினிமா வட்டாரத்தில் இவர் காதலியை தேடுவதற்கே 43 வயசு ஆயிருக்கு என்று கிண்டல் அடித்து வருகின்றனர்.
அது மட்டுமல்லாமல் திருமணம் செய்வதற்கு இன்னும் எத்தனை வருடங்கள் ஆகப்போகுதோ என்று நக்கலாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக மிகப் பிரம்மாண்டமாக இவர்கள் இருவருக்கும் அடுத்த வாரம் மாலத்தீவில் நிச்சயதார்த்தம் நடக்கப்போவதாக ட்விட்டரில் அவரது நெருங்கிய நண்பர் தெரிவித்துள்ளார்.