fbpx

நகைப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. ஒரே நாளில் ரூ.320 உயர்ந்த தங்கம் விலை..

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.42,320-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது..

#Gold Rate..!! ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

இந்நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைவதும் பின்னர் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.5,290-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.42,320-க்கு விற்பனையாகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி 60 காசுகள் உயர்ந்து ரூ.71.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.71,800க்கு விற்பனையாகிறது.. தங்கம் விலை ஒரே நாளில் ரூ.320 உயர்ந்துள்ளதால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்..

Maha

Next Post

அடுத்த மாதம் திருமணம் மன உளைச்சலில் பெண் அதிகாரி திடீர் தற்கொலை…..! காரணம் என்ன…..?

Sat Feb 18 , 2023
மனிதனுக்கு பிரச்சனைகள் வருவதும் மன அழுத்தம் வருவதும் சகஜமான விஷயம்தான் ஆனால் அதற்காக ஒருவர் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்வது எந்த விதத்திலும் நியாயமும் ஆகாது, அது எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாகவும் ஆகாது.பிரச்சனை என்று வந்து விட்டால் அதனை சந்திக்க பயப்பட்டு தான் பலர் தற்கொலை முடிவை மேற்கொள்கிறார்கள். அந்த பிரச்சனையை நேருக்கு நேர் சந்தித்து அந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவது அவ்வளவு சாதாரணமல்ல என நினைத்து […]

You May Like