நெடுந்தொடர்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்று முன்பெல்லாம் சன் டிவியை தெரிவிப்பார்கள் ஆனால் தற்சமயம் விஜய் தொலைக்காட்சியிலும் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதிலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு நெடுந்தொடரும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.
விஜய் தொலைக்காட்சியில் மதியம் மற்றும் மாலை சமயங்களில் வெற்றிகரமாக நெடுந்தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இளைஞர்களை கபரும் தொடர்கள் வீட்டுப் பெண்கள் பார்ப்பதை போன்ற கதை உள்ள தொடர்கள் என்று ஒளிபரப்பாகி வருகின்றன.
தற்சமயம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் முடிவுக்கு வரவுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதாவது மாலை நேரத்தில் ஒளிபரப்பாகும் மௌன ராகம்-2 முடிவுக்குவர உள்ளது என்று கூறப்படுகிறது. இதைக் கேட்ட ரசிகர்கள் நன்றாக தானே சென்று கொண்டிருக்கிறது, எதற்காக முடிவுக்கு கொண்டு வருகிறீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகிறார்களாம்.