சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் இன்று நடந்த நிகழ்ச்சியில் ஏற்றமிகு ஏழு திட்டங்களின் கீழ் புதிய திட்டங்களை தமிழகம் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து உணவு வழங்கும் திட்டம், திருநங்கையர்களுக்கான மாதாந்திர உதவித் தொகை 1500 ரூபாயாக உயர்வு, முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் விரிவாக்கம், பல்வேறு அரசு பணிகளில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை, 1136 கோடி ரூபாய் செலவில் பல்வேறு மருத்துவமனை கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்குதல், சென்னை மாநகர பகுதியில் கழிவு நீர் அகற்றும் பணிகளை நவீனப்படுத்தி தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர்களை தொழில் முனைவோர்களாக ஒருங்கிணைந்து மேற்கொள்வதற்கான சிறப்பு திட்டம் போன்ற 7 புதிய திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் ஆரம்பித்து வைத்தார்.
அப்போது பேசிய முதலமைச்சர் குடிமக்கள் எல்லோரும் குறையாத தண்ணீர், உயர்தர கல்வி, உயர்தர மருத்துவம் இலக்கை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டுள்ளோம் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு முன்னர் முக்கிய திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினோம்.
முதலமைச்சராக பதவியேற்ற உடன் முதலில் கையெழுத்திட்ட கோப்பு மகளிர் இலவச பேருந்து பயணம் மகளிர் மேம்பாட்டிற்காக எண்ணற்ற திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றி இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.
இளைஞர்கள் வாழ்க்கையில் ஒளியேற்றும் விதத்தில் இருக்கின்ற நான் முதல்வன் திட்டம் தமிழக மாணவர்கள் இளைஞர்களை கல்வி சிந்தனை திறனில் முன்னேற நான் முதல்வர் திட்டம் ஓராண்டு காலத்தில் 17 லட்சத்திற்கும் அதிகமான திறமைசாலிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது என்று கூறி இருக்கிறார்.
திமுக அரசு 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய முதலீடுகளை ஈர்த்திருக்கிறது. அடுத்த 10 வருடங்களுக்கான செயல் திட்டத்தை ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே தெரிவித்துள்ளேன். 49 ஆயிரத்து 385 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன தூய்மை பணியாளர்கள் தொழில் முனைவோர்களாக மாற தனியாருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது.
நாளை மார்ச் மாதம் 1ம் தேதி என்னுடைய 70-வது பிறந்தநாள் சுமார் 52 ஆண்டு காலம் அரசியலையே என்னுடைய வாழ்க்கையாக அமைத்துக் கொண்டிருக்கிறேன். அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் என்னவாக இருப்பீர்கள் என்று கேட்டபோது நான் அரசியலில் தான் நிச்சயம் இருந்திருப்பேன் என்று பதில் தெரிவித்தவன் நான்.
கிடைக்கின்ற பொறுப்புகளில் மூலமாக மக்களுக்கு சேவை புரியும் இலக்குகளை அனைத்து காலத்திலும் எனக்கு நானே வைத்துக் கொள்கின்றேன் எனக்கு யாரும் இலக்கு வைக்கவில்லை, எனக்கு நானே விளக்கு வைத்துக் கொள்கிறேன் இந்த இலக்கை அடையவே எந்த நாளும் உழைக்கின்றேன் என்று கூறியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.