fbpx

உஷார்..!! புதுமண தம்பதிகளை கறிவிருந்துக்கு அழைத்த உறவினர்..!! 35 சவரன் நகைகளை சுருட்டிக் கொண்டு ஓட்டம்..!!

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த நரேந்திரன் (26) என்பவர் மென் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இளம்பெண் ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. அப்போது, நரேந்திரனுக்கு உறவினர்கள் சிலர் விருந்து வைத்துள்ளனர். அதன்படி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி கே.கே.நகரில் உள்ள தனது சித்தி மகள் வனிதா வீட்டிற்கு தனது மனைவியுடன் கறி விருந்துக்கு சென்றுள்ளார் நரேந்திரன். மறுநாள் வீட்டிற்கு வந்த நரேந்திரன், தனது மனைவிக்கு தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி நடத்தினார். அப்போது, தாலி கயிற்றில் சேர்ப்பதற்காக பீரோவில் வைத்திருந்த குண்டு மணி மற்றும் கால் காசுகளை எடுக்க சென்ற போது, பீரோவில் வைத்திருந்த 35 சவரன் நகைகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது. மேலும், வீட்டின் பூட்டு உடைக்கப்படாமலும், வீட்டிற்கு உறவினர்கள் தவிர வேறு யாரும் வராத நிலையில், நகைகள் மட்டும் மாயமாகி இருந்ததால் நரேந்தரன் அதிர்ச்சியடைந்தார்.

உஷார்..!! புதுமண தம்பதிகளை கறிவிருந்துக்கு அழைத்த உறவினர்..!! 35 சவரன் நகைகளை சுருட்டிக் கொண்டு ஓட்டம்..!!

இது பற்றி வீட்டிற்கு வந்த உறவினர்களிடம் விசாரித்தும் நகைகள் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நரேந்திரன் வீட்டின் அருகே உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, அதில் கே.கே.நகரில் வசித்து வரும் நரேந்திரனின் சித்தி மகள் வனிதாவின் கணவர் சுரேஷ் வந்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. உடனே போலீசார், வனிதாவை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், விருந்துக்கு நரேந்திரன் தங்களது வீட்டிற்கு வந்திருந்த நேரத்தில், யாருக்கும் தெரியாமல் அவரது வீட்டிற்கு சென்று தனது கணவர் சுரேஷ் நகைகளை திருடியுள்ளார்.

ஆனால், போலீசார் விசாரிப்பது தெரிந்ததும் சுரேஷ் தலைமறைவாகி விட்டார். சுமார் ஓராண்டாக தலைமறைவாகவே இருந்துள்ளார். இந்நிலையில், அண்மையில் சுரேஷ் செல்போன் சிக்னலை போலீசார் ஆய்வு செய்த போது, கோவை மதுக்கரை குரும்பபாளையம் ராமண்ணா தோட்டம் பகுதியில் இருப்பதாக சிக்னல் காட்டி கொடுத்தது. உடனடியாக, அங்கு விரைந்த தனிப்படை போலீசார், பதுங்கி இருந்த சுரேஷை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 சவரன் நகைகள் மீட்கப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நரேந்திரன் தனது பைக் சாவியுடன் வீட்டு சாவியை வைத்திருந்ததை கண்டேன். உடனே, நரேந்திரன் வீட்டில் உள்ள நகைகளை திருட வேண்டும் என்கிற எண்ணம் தோன்றியது. இதனால், நரேந்திரனிடம் கடைக்கு சென்று வருவதாக கூறி, அவரது பைக்கை வாங்கிக் கொண்டு, நேராக மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றேன். சாவி மூலமாக அவரது வீட்டை திறந்து பீரோவில் வைத்திருந்த 35 சவரன் நகைகளையும் எடுத்துக் கொண்டு, யாருக்கும் சந்தேகம் வராதபடி மீண்டும் வீட்டிற்கு வந்து விட்டேன் என்று வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறினர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Chella

Next Post

ரூ.43,000 சம்பளத்தில் ஆவினில் வேலைவாய்ப்பு..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? முழு விவரம் உள்ளே..!!

Mon Mar 20 , 2023
வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். பதவியின் பெயர் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணி (Veterinary Consultant) காலியிடங்கள் 5 கல்வித்தகுதி கால்நடை மருத்துவ படிப்பு B.V.SC & A.H with Computer Knowledge பணி காலம் ஓராண்டு நிபந்தனைகள் இருசக்கர வாகன […]

You May Like