கர்நாடக பாடகி பாம்பே ஜெயஸ்ரீ சமீபத்தில் இங்கிலாந்தில் உள்ள தனது ஹோட்டல் அறையில் மயங்கிய நிலையில் காணப்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பாடகருக்கு மூளை அனியூரிஸம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்பொழுது வெளியாகி உள்ள தகவல்கள் படி, அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவர் வெள்ளிக்கிழமை லண்டனின் துங் ஆடிட்டோரியத்தில், யோகோ ஓனோ லெனான் சென்டர், லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்தார். புகழ்பெற்ற பாடகருக்கு சமீபத்தில் சென்னையில் உள்ள மெட்ராஸ் மியூசிக் அகாடமியால் 2023 ஆம் ஆண்டிற்கான “சங்கீத கலாநிதி” என்ற மதிப்புமிக்க பட்டம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.