fbpx

பற்களை பிடுங்கிய விவகாரம்..!! ஒருவர் கூட ஆஜராகவில்லையாம்..!! செம கோபத்தில் விசாரணை அதிகாரி..!!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததால் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சில போலீஸ் அதிகாரிகள் இடமாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில், சேரன்மகாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்தார். இதையடுத்து, தமிழக அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு முதன்மை செயலாளர் அமுதாவை பற்கள் பிடுங்கிய விவகாரம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்துவதற்காக விசாரணை அதிகாரியாக நியமித்தது. நேற்று முன்தினம் விசாரணை அதிகாரி அமுதா நெல்லை வந்து ஆட்சியர் கார்த்திகேயனிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். மேலும், உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் விசாரணை விவரங்கள் குறித்து விளக்கமளித்தார்.

இதனைத் தொடர்ந்து அம்பை தாலுகா அலுவலகத்தில் விசாரணை அதிகாரி அமுதா முன்பு இந்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க விருப்பம் இருப்பவர்கள் நேரில் வந்து ஆஜராகி விளக்கம் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. நேற்று காலை 10.15 மணிக்கு விசாரணை அதிகாரி தாலுகா அலுவலகத்திற்கு சென்றார். மாலை 5.15 மணி வரை அவர் அங்கு தான் இருந்தார். ஆனால், ஒருவர் கூட விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

வேகமெடுக்கும் கொரோனா பரவல்.. இந்த மாநிலங்களில் முகக்கவசம் கட்டாயம்..

Tue Apr 11 , 2023
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.. நோய் தொற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், சோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.. மேலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா பாதிப்பை சமாளிக்க தங்கள் தயார்நிலையை மறுபரிசீலனை செய்ய இரண்டு நாள் ஒத்திகையை தொடங்கி உள்ளன.. இந்த நிலையில் பல மாநிலங்கள் வைரஸ் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறு […]

You May Like