fbpx

செலரி சாப்பிட்டால் சேலரிக்கு செலவில்லைங்க!… உடல் எடையை குறைக்க உடனடி ரிசல்ட் தரும் சூப்!… சிம்பிள் ரெசிபி!

உடலில் கெட்ட கொழுப்பு தேங்குவதைத் தடுத்து உடல் எடையை குறைக்க செலரி தண்டு சூப் மிகவும் நல்ல பலன் தருகிறது. செலரி சூப் செய்யும் முறை குறித்து இதில் தெரிந்துகொள்வோம்!

அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி என்னும் அரிய காய்கறி செலரி (Celery) என்பது சாலட் கீரை வகையைச் சேர்ந்ததாகும். இதைச் சமைக்காமலேயே சாப்பிடலாம். செலரியின் இலை, இலைத் தண்டு, இலைக் காம்பு முதலியவை உணவாக உபயோகப் படுத்தப்படுகின்றன. இந்தியாவில் கீரைத்தண்டு மாதிரி அடிக்கடி இதைச் சமைத்துச் சாப்பிடும் காலம் ஆரம்பமாகிவிட்டது.உணவு செரிமானமின்மை, ஆஸ்துமா, இரத்த சோகை, சாகேமியா, உடற் பலவீனம், இதய நோய்கள், சிறுநீரகத்தில் கற்கள் உருவாதல், தூக்கமின்மை, மூட்டு வாதம், ஊளைச்சதை, நரம்புக் கோளாறுகள், உயர் இரத்த அழுத்தம் முதலிய நோய்களை செலரித் தண்டுகள் குணப்படுத்துகின்றன.

செலரியில் மக்னீசியமும், இரும்புச் சத்தும் அதிக அளவில் இருப்பதால் இரத்த சோகை, லூகேமியா முதலிய நோய்கள் உடனே குணமாகின்றன. இரத்த விருத்தியும் விரைந்து ஏற்படுகிறது. இதயமும், இதயத்திற்குச் செல்லும் நரம்புகளும் தடையின்றி இயங்க மக்னீசியம் கூடுதலாகத் தேவை. அந்தத் தேவையை செலரியில் உள்ள மக்னீசிய உப்புகள் பூர்த்தி செய்துவிடுகின்றன. இதனால் நெஞ்சுவலி, மாரடைப்பு போன்றவை ஏற்படாமல் முன்கூட்டியே தடுக்கப்படுகின்றன.

புற்றுநோய், நுரையீரல் அழற்சி, ஆஸ்துமா, தொண்டை தொடர்பான நோய்கள் ஆகியன குணமாகச் செலரி சூப் அருந்த வேண்டும். அல்லது இலை, தண்டு ஆகியவற்றுடன் சிறிதளவு நீர் சேர்த்து வதக்கி அடுப்பிலிருந்து இறக்கிச் சாப்பிட வேண்டும். சிறுநீரில் கற்கள் உருவாகாமல் இருக்கவும் இத்தண்டு பயன்படுகிறது. வாரத்திற்கு நான்கு நாள்களாவது செலரியைச் சமையலில் சேர்த்தால் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படா. கற்கள் இருந்தாலும் இது கரைத்துவிடும்.

செலரியின் தண்டுகளையும் இலைகளையும் சூப்பாகத் தயார் செய்து சாப்பிடலாம்; இல்லை எனில் சாறாக மாற்றி அருந்தலாம். செலரியின் விதையும் மருத்துவக் குணங்கள் நிரம்பியது. அதைக் சாறாக்கி வாத நோய்க்காரர்கள் அருந்தலாம்.உடல் எடையை குறைக்க முயற்சி செய்து வருபவர்கள் முடிந்த வரை குறைந்த கலோரி உணவுகளை சாப்பிட வேண்டும். அப்படியான ஒரு ரெசிபி தான் செலரி சூப். இது உடலில் கெட்ட கொழுப்பு தேங்குவதைத் தடுக்கிறது. நீண்ட நேரத்திற்கு பசியை கட்டுப்படுத்துகிறது. இப்போது செலரி சூப் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:1 செலரி தண்டு, 1 மீடியம் அளவு தக்காளி, 1 மீடியம் அளவு கேரட், 2-3 பூண்டு பற்கள்
1 1/2 கப் காய்கறி வேக வைத்த தண்ணீர் (வெஜிடபிள் ஸ்டாக்), 1 தேக்கரண்டி மிளகுத்தூள், 1 தேக்கரண்டி எண்ணெய், சுவைக்கேற்ப உப்பு. செய்முறை:சூப் செய்வதற்கு முதலில் செலரி, தக்காளி, கேரட் மற்றும் பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு குக்கரை அடுப்பில் வைத்து நறுக்கி வைத்த செலரி, தக்காளி, கேரட் மற்றும் பூண்டு ஆகிய அனைத்தையும் சேர்த்து ஒரு நிமிடம் மட்டும் வதக்கவும்.
இதில் வெஜிடபிள் ஸ்டாக் சேர்த்து கிளறவும்.

வெஜிடபிள் ஸ்டாக் என்பது கடைகளில் கிடைக்கும். ஆனால் இதனை வீட்டிலே செய்து பயன்படுத்துவது சிறந்தது. மூன்று டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் முட்டைக்கோஸ், கேரட், காலிஃப்ளவர், வெங்காயம் போன்ற உங்களுக்கு விருப்பமான எந்த காய்கறியை வேண்டுமானாலும் சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்தால் வெஜிடபிள் ஸ்டாக் தயார். குக்கரை மூடி மூன்று விசில் வரும் வரை காத்திருக்கவும். பிரஷர் அடங்கியதும் ஒரு மத்து வைத்து கடைந்து கொள்ளலாம். சுவைக்கு ஏற்ப எலுமிச்சை சாறு, மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். சூடாக பரிமாறவும்.

Kokila

Next Post

செம்பருத்தி பூ ஜூஸ் குடிப்பதால் இத்தனை நன்மைகளா?... ரெசிபி இதோ!

Tue Apr 18 , 2023
செம்பருத்தி பூக்களின் தேநீர் அல்லது ஜூஸ் பருகுவதன் மூலம் இரத்த அழுத்தம் குறைகிறது. ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருள்கள் கொண்டுள்ளதால் உடலில் உள்ள செல் சேதத்தை எதிர்த்து போராடுகிறது. இது இருமல், முடி உதிர்தல் போன்ற சிகிச்சைக்கு உதவி புரிகிறது . ஆரோக்கியமான உடலுக்கு தேவையான வெப்பநிலையை பராமரிக்க உதவுகிறது-. இப்பூக்களில் வைட்டமின் சி மற்றும் தாதுக்கள் கொண்டுள்ளது. இதயம் மற்றும் நரம்பு மண்டலத்துக்கு தேவையான சுகாதார நலன்களை வழங்குகிறது. எடை கட்டுபடுத்தும் […]

You May Like