fbpx

பைத்தியக்காரத்தனமான செயல்..!! சமந்தாவின் சினிமா கெரியர் அவ்வளவுதான்..!! ஐட்டம் டான்ஸ் ஆடியது அதற்குதான்..!!

சினிமா பின்னணி இல்லாமல் சொந்த உழைப்பில் வளர்ந்து முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தனது அற்புதமான நடிப்புத் திறமையால் புகழ் பெற்ற சமந்தா, தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பின்னடைவைச் சந்தித்தார். அதுமட்டுமின்றி, மயோசிடிஸ் நோய் பாதிப்பும் அவரின் கெரியரின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருந்தது. இருப்பினும் மனம் தளராத சமந்தா அவற்றையெல்லாம் வென்று தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார்.

சமந்தா நடிப்பில் தற்போது சாகுந்தலம் என்கிற சரித்திர படம் ரிலீசாகி உள்ளது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸிலும் படுமோசமான வசூலை பெற்று வருவதால் படுதோல்வியை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிலையில், நடிகை சமந்தா குறித்து தயாரிப்பாளர் சிட்டி பாபு பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். இதுதான் தற்போது டோலிவுட்டில் பேசு பொருள் ஆகி உள்ளது.

சமந்தாவின் கேரியர் முடிந்துவிட்டது, அவர் ஒரு டிராமா குயின், அவரது ஸ்டார் ஹீரோயின் அந்தஸ்தை இழந்துவிட்டார் என சரமாரியாக சாடியுள்ளார். மேலும், விவாகரத்துக்குப் பின், வாழ்வாதாரத்துக்காக தான் புஷ்பா படத்தில் சமந்தா ஐட்டம் டான்ஸ் ஆடினார். ஸ்டார் ஹீரோயின் என்ற பட்டத்தை இழந்த பிறகு தனக்கு வரும் வாய்ப்புகளை எல்லாம் சமந்தா செய்து வருகிறார். ஹீரோயினாக அவரது கெரியர் முடிந்துவிட்டதால் மீண்டும் நட்சத்திர அந்தஸ்துக்கு வர முடியாது. தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை செய்துகொண்டு அவர் தன் பயணத்தைத் தொடர வேண்டும்.

யசோதா படத்தின் புரமோஷனின் போது சமந்தா கண்ணீர் சிந்தினார். அதன்மூலம் வெற்றி பெற முயன்றார். இப்போது சகுந்தலம் படத்திற்கும் அதே யுக்தியை கையாண்டிருக்கிறார். இறப்பதற்கு முன் இப்படியொரு வேடத்தில் நடிக்கத் திட்டமிட்டிருந்ததாக கூறி அனுதாபத்தை அடைய முயற்சிக்கிறார். அதே சமயம், தொண்டை சரியாக இல்லாததால், குரல் போனதாக பொய் சொல்கிறார். ஒவ்வொரு முறையும் செண்டிமெண்ட் கைகொடுக்காது. கதாபாத்திரமும் படமும் நன்றாக இருந்தால் மட்டுமே மக்கள் ரசிப்பார்கள். இத்தகைய மலிவான மற்றும் பைத்தியக்காரத்தனமான செயல்கள் வேலை செய்யாது. எனக்கு சகுந்தலம் படத்தில் ஆர்வம் இல்லை எனறு தயாரிப்பாளர் சிட்டிபாபு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Chella

Next Post

திருநெல்வேலியில் கந்துவட்டி கேட்டு மிரட்டிய இந்து கட்சி பிரமுகர் அதிரடி கைது…….! காவல்துறையினர் நடவடிக்கை….!

Wed Apr 19 , 2023
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியை சேர்ந்த ராஜபாண்டியன் இவர் இந்து மக்கள் கட்சியின் தென் மண்டல தலைவராக இருக்கிறார். மேலும் இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், பாளையங்கோட்டை கேடிசி நகரில் வசித்து வரும் பாலகுமாரன் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இத்தகைய சூழ்நிலையில் தான் பாலகுமாரின் மனைவி கீதா தன்னுடைய அவசர தேவைக்காக ராஜபாண்டியனிடம் மூன்று லட்சம் ரூபாய் வட்டிக்கு பணம் […]
வரதட்சணை கேட்காமல் லட்சக்கணக்கில் புரோக்கர் கமிஷன்..!! திருமணம் முடிந்தும் சிங்கிளாக சுத்தும் இளைஞர்..!!

You May Like