fbpx

டீ, காஃபி குடிக்கும் முன் இதை மட்டும் மறந்துறாதீங்க..!! மீறினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் தெரியுமா..?

பெரும்பாலான இந்தியர்களுக்கு டீ மற்றும் காஃபி மிகவும் பிடித்த பானங்களாக இருக்கிறது. காலை எழுந்தவுடன் இந்த இரண்டில் ஒன்றை குடித்தால் தான் அவர்களது நாள் நகரும். அதே போல நாம் டென்ஷன் மற்றும் ஸ்ட்ரெஸ்ஸில் இருக்கும் போதெல்லாம் டீ அல்லது காஃபியை குடிக்க விரும்புகிறோம். வீட்டிற்கு உறவினர்கள் அல்லது நண்பர்கள் வந்தால் உடனடியாக நாம் கொடுப்பது டீ அல்லது காஃபி தான். சிலர் காலை எழுந்ததிலிருந்து இரவு மீண்டும் தூங்க செல்வதற்குள் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை காஃபி அல்லது டீ-யை குடிக்க விரும்புகிறார்கள். இன்னும் சிலர் இதை விட அதிகம் குடிக்கிறார்கள். இருப்பினும் இந்த 2 பானங்களுமே அமிலத்தன்மை கொண்டவை. மேலும் இந்த இரண்டுமே வயிற்றில் வாயு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும் என்பது பெரும்பாலானோருக்கு தெரியாது. எனவே, அதிகமாக டீ அல்லது காஃபி குடிப்பது நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

டீ, காஃபி எடுக்கும் முன் தண்ணீர் குடிப்பது ரிஸ்க்கை குறைக்குமா…?

டீ மற்றும் காஃபி இரண்டுமே வயிற்றில் அமிலத்தை உருவாக்குகின்றன. டீ-யின் pH மதிப்பு 6-ஆகவும், காஃபியின் pH மதிப்பு 5 ஆகவும் உள்ளது. இவற்றை அதிக அளவில் எடுத்து கொண்டால், புற்றுநோய் அல்லது அல்சர் போன்ற நோய்களின் அபாயம் அதிகரிக்கலாம். ஆனால், டீ குடிப்பதற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தால், அதன் அமில விளைவுகளால் ஏற்படும் பாதிப்பை குறைக்கலாம். டீ அருந்துவதற்கு முன் தண்ணீர் குடிப்பதால் குடலில் ஒரு லேயர் உருவாகிறது. இந்த லேயர் டீ குடிப்பதால் ஏற்படும் அமில விளைவை குறைக்கிறது.

டீ-யின் தீமை விளைவுகள்:

— டீ மற்றும் காஃபியில் Tannin என்ற கலவை காணப்படுகிறது. இது இந்த 2 பானங்களுக்கும் கசப்பான சுவையை ஏற்படுத்துகிறது. இந்த பொருள் இருப்பதன் காரணமாகவே டீ அல்லது காஃபி குடிக்கும் போது ஒருவர் மிதமான Intoxication-யை உணர்கிறார். மேலும், Tannin குடல் திசுக்களை சேதப்படுத்துகிறது. இதனால் வயிறு சம்பந்தமான பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. குமட்டல், வாந்தி, வயிற்று வலி போன்ற பிரச்சனைகளையும் இது ஏற்படுத்துகிறது.

— மேலும், வாய் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு டீ தீங்கு விளைவிக்கிறது. இருப்பினும் கூட இந்த எதிர்மறை விளைவுகள் அனைத்துமே ஒரு நாளில் நாம் எவ்வளவு டீ குடிக்கிறோம் என்பதை பொறுத்தது. டீ குடிக்கும் முன் தண்ணீர் குடிப்பது உடலின் PH பேலன்ஸை பராமரிக்க உதவுகிறது.

— மேலும், தண்ணீர் வாயில் உள்ள பாக்டீரியாக்களை சுத்தப்படுத்துகிறது. ஏனெனில், குடிநீர் வாயில் ஒரு லேயரை உருவாக்கி பக்க விளைவுகளை குறைக்கிறது. எனவே, டீ அல்லது காஃபி குடிப்பதற்கு சுமார் 15 நிமிடங்களுக்கு முன் தண்ணீர் குடித்தால், அது இந்த பானங்களில் உள்ள அமிலத்தை நீர்த்துப்போக செய்யும் என்று கூறப்படுகிறது.

Chella

Next Post

அரசு வேலையில் சேர வேண்டுமென்பது உங்கள் கனவா..? அப்படினா இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!!

Fri May 12 , 2023
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இரயில்வே, வங்கி, எஸ்எஸ்சி ஆகிய அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. இந்த பயிற்சிக்கு விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள தேர்வர்கள் இதற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மாபெரும் திறன் மேம்பாட்டிற்கான ”நான் முதல்வன்” திட்டத்தின் கீழ், கடந்த மார்ச் மாதம் ‘போட்டித் தேர்வு பிரிவு” தொடங்கப்பட்டது. தமிழக இளைஞர்கள் மத்திய அரசுப் போட்டிகளை எளிதாக அணுகுவதற்கு ஏதுவாக, […]

You May Like