fbpx

தனது காதலனை அறிமுகப்படுத்திய கீர்த்தி சுரேஷ்..? எல்லாம் ஒரே மாதிரி இருக்கே..!! வைரலாகும் புகைப்படம்..!!

நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கிய ’இது என்ன மாயம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து சூர்யா, விஜய், விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் நட்சத்திர அந்தஸ்தை பெற்ற கீர்த்தி சுரேஷ், தெலுங்கில் வெளியான மகாநடி படத்தில் நடித்ததற்காக தேசிய விருது வென்றார். அவரின் கெரியரில் அப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

பின்னர் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தெலுங்கிலும் பட வாய்ப்புகள் குவிந்தன. சமீபத்தில் கூட தெலுங்கில் நானிக்கு ஜோடியாக இவர் நடித்த தசரா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. தற்போது தெலுங்கில் இவர் கைவசம் போலா சங்கர் திரைப்படம் உள்ளது. இப்படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடித்து வருகிறார். இது தமிழில் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் ரீமேக் ஆகும்.

தனது காதலனை அறிமுகப்படுத்திய கீர்த்தி சுரேஷ்..? எல்லாம் ஒரே மாதிரி இருக்கே..!! வைரலாகும் புகைப்படம்..!!

இதுதவிர தமிழில் நடிகை கீர்த்தி சுரேஷ் கைவசம் மாரி செல்வராஜின் மாமன்னன், ஜெயம் ரவி ஜோடியாக சைரன் மற்றும் கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் ரிவால்வர் ரீட்டா, ரகுதாதா என அரை டஜன் படங்கள் உள்ளன. இப்படி பிசியான நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் பற்றி அடிக்கடி திருமண வதந்திகள் பரவிய வண்ணம் உள்ளன. அண்மையில அவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ரியல் எஸ்டேட் அதிபரும், தொழிலதிபருமான தன் நீண்ட நாள் நண்பன் ஃபர்ஹான் பின் லியாகத் என்பருவருடன் மேட்சிங் மேட்சிங் உடையணிந்து நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் இவர் தான் உங்கள் காதலனா என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் கீர்த்தி சுரேஷ் காதலிப்பதாக சொல்லப்பட்ட தொழிலதிபர் இவர்தானா என்கிற பேச்சு அடிபடத்தொடங்கி உள்ளது.

Chella

Next Post

வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்ட மாஸ் அப்டேட்..!! இனி உங்களை தவிர வேறு யாரும் பார்க்க முடியாது..!!

Tue May 16 , 2023
வாட்ஸ் அப் செயலியில் மிகவும் நெருக்கமானவர்களின் உரையாடல்களை பாதுகாக்க சேட் லாக் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் செயலியை இளைஞர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை பயன்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப் பயனர்களாக உள்ளனர். இந்த வாட்ஸ் அப் பிறருடன் தகவல்களை எளிதில் பகிர்ந்துக் கொள்ளவும், பயனர்கள் விரும்பும் பல முக்கிய அம்சங்களையும் கொண்டுள்ளது. ஆடியோ, வீடியோ காலிங் வசதி, ஸ்டேட்டஸ் அப்டேட், மெசேஜிங் வசதி, குரூப் […]

You May Like