fbpx

சோஷியல் மீடியாவில் கதறி அழுத பிரபல நடிகை..!! கண்ணீர் மல்க ட்விட்டரில் பதிவு..!! என்ன ஆச்சு..?

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். இவர், மாடல் அழகியும் ஆவார். யுவன் ஷங்கர் ராஜாவின் தயாரிப்பில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார். இந்த படம் அவருக்கு வெற்றியை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து தனுசு ராசி நேயர்களே, வர்மா போன்ற படங்களில் நடித்தார். கடைசியாக சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான காஃபி வித் காதல் படத்தில் நடித்திருந்தார். தற்போது இவரது நடிப்பில் ‘கருங்காப்பியம்’ எனும் படம் வெளியாகவுள்ளது.

கடந்த ஆண்டு முகப்பொலிவு சிகிச்சைக்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்கு பின் வலது கண்ணில் ரத்தக்கசிவு ஏற்பட்டு முகம் வீங்கியதாக கூறப்பட்டது. இதையடுத்து, மருத்துவரின் தவறான சிகிச்சையே காரணம் என குற்றம்சாட்டி இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரைசா தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழுது வடியும் புகைப்படங்களை பதிவிட்டு, சில குழப்பமான கேப்ஷனையும் பதிவிட்டு இருக்கிறார்.

அழுதபடி இருக்கும் படங்களை ரைசா தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு, இது ஈஸி இல்ல. நீங்கள் தனியா இல்ல. படிப்படிப்படியாக தீர்வை கண்டு பிடிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார். அவருக்கு ஜி.வி.பிரகாஷ், விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பிரபலங்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் ரசிகர்களும் மனம் உருகி அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். பலரும் அவருக்கு என்ன ஆனது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Chella

Next Post

வாகன ஓட்டிகளே பெட்ரோல் பங்க்கில் உஷார்..!! செல்போன் பயன்படுத்தியதால் பெண் பலி..!! பதற வைக்கும் சிசிடிவி காட்சி..!!

Sun May 21 , 2023
காலை எழுந்ததும் காஃபி குடிப்பதில் தொடங்கி சுப நிகழ்வுகள், ஆபிஸ் பார்ட்டிகள், கோவில் திருவிழாக்கள் ஏன் துக்க வீடுகளில் கூட ஆன்லைன், லைவ் டெலிகாஸ்ட் செய்கின்றனர். மனிதர்களின் ஆறாம் விரலாய் எங்கு சென்றாலும் அருகில் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் பேசுவதே இல்லை. அனைத்தையும் எங்கோ, எதிலோ இருக்கின்ற வேறொருவருடன் சாட் செய்து கொண்டோ அல்லது பேசிக் கொண்டோ தான் இருக்கின்றனர். ஆனால், பெட்ரோல் பங்குகளில் செல்போனை உபயோகிக்க வேண்டாம் என […]
சோஷியல் மீடியாவில் கதறி அழுத பிரபல நடிகை..!! கண்ணீர் மல்க ட்விட்டரில் பதிவு..!! என்ன ஆச்சு..?

You May Like