சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவர்களின் கடைசி ஐபிஎல் தொடராக தற்போதைய தொடர் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய நிலையில், இந்த தொடர் முழுவதும் அவர் செல்லும் இடமெல்லாம் அவருக்கு பிரியாவிடை கொடுக்கும் விதத்தில், ரசிகர்கள் குவிந்து ஆராவாரம் செய்து வருகிறார்கள்.
அதோடு மட்டுமல்லாமல் எதிரணியின் வீரர்கள் பலரும் சென்னை அணி உடனான போட்டி முடிவடைந்த உடன் தோனியை சந்தித்து அவர்களின் உடை மீது தோனியின் ஆட்டோகிராபை வாங்கி செல்கிறார்கள்.
இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தை நேற்று நடைபெற்ற ஐபிஎல் பிளே ஆப் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்த போட்டிக்கு பின்னர் தோனி உரையாற்றும் போது ஓய்வு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், எதிர்வரும் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவேனா என்பது தொடர்பாக இதுவரையில் முடிவு செய்யவில்லை. அதற்கு இன்னும் சற்றேற குறைய 8 அல்லது 9 மாதங்கள் இருக்கின்றன டிசம்பர் மாதம் தான் ஐபிஎல் ஏலம் நடைபெறுகிறது. அது பற்றி இப்போதே யோசித்து எதற்காக தலைவலியை உண்டாக்கிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதாக இருந்தாலும் சரி, அல்லது களத்திற்கு வெளியே ஏதாவது ஒரு பொறுப்பாக இருந்தாலும் சரி எப்போதும் சென்னை அணியுடன் இருப்பேன் என்று தெரிவித்திருக்கிறார். கேப்டன் தோனியின் இந்த பதிலால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களும் வீரர்களும் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.