திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே காவுத்தாம்பாளையத்தை சேர்ந்த தம்பதி வெள்ளைச்சாமி, ராமேஸ்வரி என்கின்ற தேவி (42) இவர்கள் கடந்த 4ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் மீன் கடைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றனர் அப்போது அவருடைய மகள் ரஞ்சிதா, தங்கை மகன் முத்துக்குமார் உள்ளிட்டோர் மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பாளையம் சுடுகாடு அருகே போய்க் கொண்டிருந்த போது அங்கு பதில்கள் மறைக்கப்பட்டிருந்த நிலையில், வெள்ளை நிற கார் ஒன்று நின்று கொண்டிருப்பதை கவனித்தனர் திடீரென்று காட்டுக்குள் இருந்து கையில் கத்தி, அரிவாளுடன் வந்த சிலர் இருசக்கர வாகனத்தை தள்ளி விட்டுள்ளனர். ராமேஸ்வரி அவருடைய மகன் ரஞ்சிதாவை காரில் கடத்திச் சென்றனர் இருவரிடமும் இருந்து 13.5 சவரன் தங்க நகைகளை பறித்து விட்டு செங்கப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை அருகே இறக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.
இது குறித்து ராமேஸ்வரி கடந்த 4ம் தேதி குன்னத்தூர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார் திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாமிநாதன் உத்தரவின் அடிப்படையில் குன்னத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் அம்பிகா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. கண்காணிப்பு கேமராக்களை வைத்து ஆய்வு நடத்தியதில் சம்பந்தப்பட்ட கார் கோவை மாவட்டம் கிணத்துக்கடவை சார்ந்தது என்ற உண்மை தெரிய வந்துள்ளது.
கிணத்துக்கடவு ஏழுர் வடபுதுறை சேர்ந்த செந்தில்குமார் 48 திருப்பூர் நல்லூரை சேர்ந்த இசக்கி பாண்டி(32) உள்ளிட்டோரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து வெள்ளையை சேர்ந்த அருண்பாண்டியன்( 23), ஈரோடு வீரம்பாளையத்தை சேர்ந்த சேகர் (29), சிவகங்கை மாவட்டம் உழவன் வாயிலை சேர்ந்த அருள் செல்வம் (31), ஊத்துக்குளி பள்ளக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்த பிரபு (29), திருப்பூர் கொங்கு பிரதான சாலை ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த லோகநாதன்(30) உள்ளிட்டோரை நேற்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவர்கள் திருப்பூரில் இருக்கின்ற நிறுவனங்களில் வேலை பார்த்தபோது ஏற்பட்ட பழக்கத்தின் அடிப்படையில், இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதில் இசக்கி பாண்டி, அருண் பாண்டியன் மீது வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றனர் இதனை தொடர்ந்து 10. 2 கிராம் தங்க நகைகள், 4300 ரொக்கம், 2 அலைபேசிகள், 2 இருசக்கர வாகனங்கள், உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டனர் இதனை தொடர்ந்து ஏழு பேரும் கோவை மத்திய சிறையில் காவல்துறையினரால் அடைக்கப்பட்டனர்.
தாய், மகளை கடத்தி கத்தி முனையில் தங்க நகைகளை பறித்த வழக்கில் குற்றவாளிகளை 48 மணி நேரத்தில் விரைந்து கைது செய்து நடவடிக்கை மேற்கொண்ட தனிப்படை காவல்துறையினரை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ஆர் சுதாகர், திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாமிநாதன் உள்ளிட்டோர் பாராட்டி வெகுமதி வழங்கியுள்ளனர்.