தமிழில் தம்பிக்கு ஒரு பாட்டு என்ற படத்தில் முரளிக்கு ஜோடியா நடித்தவர் பாலாம்பிகா. அதன்பின் அவர் சினிமாவில் தென்படவில்லை. திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்த அவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில், விஜய்க்கு ஜோடியாகவும், பிரசாந்திற்கு ஜோடியாகவும் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் அவர்களுடன் நடிக்க முடியும் என்ற கட்டாயத்தில் இருக்கவே அப்பா அதற்கு ஒத்துக்கவில்லை.
அதனால் அந்தப் படங்கள் எல்லாம் என்னை விட்டு போய்விட்டது. விஜய்யுடன் ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை தவறிவிட்டேனே. நடித்திருந்தால் என்னுடைய ரேஞ்சே வேற மாதிரி இருக்கும். எல்லாத்துக்கும் காரணம் என் அப்பா தான் என புலம்பியுள்ளார். தொடர்ந்து ஒரு வேளை அட்ஜஸ்ட்மென்டுக்கு சம்மதிச்சிருக்கலாமோ என நினைக்கிறியா எனக் கேட்ட கேள்விக்கு, இதுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை எல்லாரும் தான் நடிக்கிறாங்க. என் அப்பா தான் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். என்ன செய்வது என பதிலளித்துள்ளார்.