90 காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பல திரைப்படங்கள் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவர் தான் நடிகை மந்த்ரா. ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், பின்னர் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து பின்னர் ஹீரோயினாக தெலுங்கில் அறிமுகமானார். அழகிலும் சரி, நடிப்பிலும் சரி இவரை அடிச்சுக்க ஆளே இல்லை எனக் கூற முடியும். அந்தளவிற்கு பலரை வசியம் செய்யக்கூடிய அழகு இவருக்கு உண்டு. இதனால் இவருடன் நடிக்க பல நடிகர்களும் போட்டிப் போட்டுக்கொண்டனர்.
அந்தவகையில் 1997-ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் ‘லவ் டுடே’ திரைப்படம் வெளியானது. இதில் விஜய்க்கு ஜோடியாக சுவலட்சுமியும், கதாநாயகியின் தோழியாக மந்த்ராவும் நடித்திருப்பார். விஜய் மந்த்ரா மீது கொண்ட கிரஷ்ஷால் தான் இப்படத்தில் இரண்டாம் கதாநாயகியாக அவரை நடிக்க வைக்குமாறு கேட்டு கொண்டதாக கூறப்படுகிறது. அதேபோன்று அருண் விஜய், மந்த்ரா ஆகியோர் நடிப்பில் ‘பிரியம்’ என்ற திரைப்படம் 1996இல் வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பின் போது அருண் விஜய் மற்றும் மந்த்ரா இருவருமே காதலித்து வந்தார்களாம். ஆனால், இந்த காதலுக்கு அருண் விஜய்யின் பெற்றோர் சம்மதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.