தமிழ் சின்னத்திரை ஒவ்வொன்றிலும் ரசிகர்களைக் கவரும் விதமாக பல்வெறு ரியாலிட்ரி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், சூப்பர் ஹிட் சீரியல்கள் மற்றும் ரியாலிட்ரி ஷோக்களை தொகுத்து வழங்குவதில் விஜய் டிவி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. விஜய் டிவியில் பாப்புலர் ஆகி அதன் பின் சினிமாவில் நுழைந்து சந்திப்பவர்கள் லிஸ்ட் மிக பெரியது. அதனால் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு தேடுபவர்கள் ஏராளம்.
இந்நிலையில், விஜய் டிவியல் வாய்ப்பு வாங்கி தருவதாக நடந்து வரும் மோசடி பற்றி தற்போது சேனல் தரப்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வாய்ப்பு வாங்கி தருவதாக உங்களின் போட்டோ, வீடியோக்கள் மற்றும் பணம் கேட்பவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். அதனால் ஏற்படும் இழப்புகளுக்கு சேனல் பொறுப்பல்ல என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.