புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பு நடத்தினர். அப்போது, சீமான் தமிழ் தேசியக் கொள்கையை விடுத்தால் பாஜக கூட்டணிக்கு நாங்கள் அவரை வரவேற்போம் என்று கூறியுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த சீமான், எச்.ராஜா எத்தனை முறை அழைத்தாலும் வாய்ப்பில்லை ராஜா என்பதுதான் எனது பதில், நட்பு என்பது வேறு அரசியல் நிலைப்பாடு என்பது வேறு, அவர் என்னை அழைப்பது எங்களது வளர்ச்சியை காட்டுகிறது என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், தமிழக அரசிடம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை கொடுங்கள் என்று யாரும் கேட்கவில்லை, அனைத்து குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை என்று தேர்தலுக்கு முன்பாக அறிவித்த அரசு, ஏன் தற்போது விதிமுறைகளை விதிக்கிறது, அப்படி என்றால் பிச்சைக்காரனாக இருந்தால் தான் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற நிலைக்கு அரசு தள்ளிவிட்டது, நல்லா இருந்தால் நாங்கள் ஏன் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை உங்களிடம் பெற போகிறோம். நகைக்கடன் தள்ளுபடி செய்கிறோம் என்று தேர்தலுக்கு முன்பு திமுக கூறியதை அடுத்து பொதுமக்கள் தங்களுடைய நகைகளை வங்கிகளில் அடமானம் வைத்து தற்போது நகை கடன் தள்ளுபடி கிடைக்காமல் அலைவது போன்று தான் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை திட்டமும், என்று கூறினார்