fbpx

நடிகருடன் லிவிங் டு கெதர்..!! 4 முறை கருக்கலைப்பு..!! பிரபலத்துடன் ஓட்டம்..!! ’ஜெயிலர்’ பட நடிகையின் மறுபக்கம்..!!

தமிழில் கடந்த 2016இல் வெளியான ‘பட்டதாரி’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மிர்ணா. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்த அபி சரவணன் (விஜய் விஷ்வா) என்பவரை காதலிக்க துவங்கினார். முதல் படத்திலேயே இருவருக்கும் காதல் மலர, இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்துள்ளனர்.

பின்னர், இருவீட்டாரின் சம்மதத்துடன் இருவருமே திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, சென்னையில் இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். 3 ஆண்டுகளாக ஸ்மூத்தாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில், 2019ஆம் ஆண்டு சில பிரச்சனைகள் வெடிக்க துவங்கியது. விஜய் விஷ்வா படப்பிடிப்பிற்காக வெளியூருக்கு சென்ற போது, மிர்ணா வீட்டில் இருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளார். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால், விஜய் விஷ்வா போலீசில் புகார் அளித்தார்.

ஒரு மாதத்திற்கு பின்பு தான் விஜய் விஷ்வாவுக்கு துரோகம் செய்து விட்டு இசையமைப்பாளரும், நடிகருமான முன்னணி பிரபலத்தின் மேனேஜருடன் தகாத உறவு வைத்துக் கொண்டு அவருடன் மிர்ணா எஸ்கேப் ஆன விஷயம் தெரியவந்தது. இதையடுத்து, சென்னை பெருநகர காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில் ‘விஜய் விஷ்வா தன்னுடைய இமெயில் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளத்தை ஹேக் செய்து, தன்னுடைய பாஸ்போர்ட் மற்றும் பேன் கார்டு ஆகியவற்றின் தகவல்களை திருடியுள்ளார்.

மேலும், தனக்கு பட வாய்ப்பு கொடுக்கும் இயக்குனர்களுக்கு மிரட்டலும் விடுக்கிறார் என்று தெரிவித்திருந்தார் மிர்ணா. மேலும், தன்னை திருமணம் செய்துகொண்டதாக போலி சான்றிதழ் தயாரித்து, விஷ்வா தொல்லை கொடுத்து வருவதாகவும் புகார் அளித்தார். இந்த சம்பவம் 2019இல் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், விஜய் விஷ்வா நீதிமன்றத்தில் திருமணம் செய்ததற்கான சான்றிதழ்கள், புகைப்பட ஆதாரங்களையு வழங்கினார்.

அதே போல் மிர்ணா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருவதாலும், தன்னை இளமையாகவும், அழகாவும் கட்ட சில ஊசிகள் போட்டுக் கொள்வதால், 4 முறை அபாஷன் செய்து தன்னுடைய குழந்தையை கலைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். தற்போது இவர்களின் வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், மிர்ணா விவாகரத்து கொடுக்காமல் தொடர்ந்து விஜய் விஷ்வாவை அலைக்கழித்து வருகிறார் என ஜெயிலர் பட நடிகை மிர்ணா பற்றி பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Chella

Next Post

Passport | பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை தேடினால் சிக்கல்..!! எச்சரிக்கும் மத்திய அரசு..!! இதுதான் ஒரிஜினல்..!!

Sat Aug 19 , 2023
நீங்கள் பாஸ்போர்ட் பெற விரும்பினால், மத்திய அரசின் இந்த எச்சரிக்கையைப் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள். பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை தேடுபவர்கள் போலி இணையதளங்கள் அல்லது மொபைல் செயலிகளுக்கு இரையாக வேண்டாம் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. பல போலி இணையதளங்கள் மற்றும் மொபைல் செயலிகள் விண்ணப்பதாரர்களிடம் இருந்து தரவுகளை சேகரித்து பெரும் கட்டணம் வசூலிப்பது தெரியவந்துள்ளதால், அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. போலி […]

You May Like