fbpx

குப்பைத் தொட்டியாக மாறிய பிரபல நிறுவனத்தின் கார்..!! ஆதங்கத்தில் வாடிக்கையாளர் செய்த காரியத்தை நீங்களே பாருங்க..!!

இந்திய கார் தயாரிப்பு நிறுவனங்களில் மஹிந்திரா பல ஆண்டுகளாக முன்னணியில் இருந்து வருகிறது. பெட்ரோல், டீசலை தொடர்ந்து தற்போது மின்சாரத்தில் இயங்கக் கூடிய கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு காணப்படுகிறது. முதலில் அதிக தொகை செலுத்தி இந்த கார் வாங்கப்பட்டாலும், எரிபொருள் செலவு குறையும் என்பதால் எலெக்ட்ரிக் கார்கள் மீது வாடிக்கையாளர்களின் விருப்பம் அதிகரித்துள்ளது.

அந்த வகையில், பிரபல மஹிந்திரா நிறுவனமும் மின்சார வாகனங்களை சந்தைப்படுத்தியுள்ளது. மஹிந்திராவின் XUV 400 என்ற எலெக்ட்ரிக் காரை ஏராளமான வாடிக்கையாளர்கள் வாங்கி வருகின்றனர். இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தின் காஜியாபாத்தில் வாடிக்கையாளர் ஒருவர் எக்ஸ்.யு.வி. 400 எலெக்ட்ரிக் காரை வாங்கியுள்ளார். அந்த கார் எதிர்பார்த்த பலனை கொடுக்காததால், அதை குப்பைத் தொட்டி போல் மாற்றியுள்ளார். மேலும், பேனர் ஒன்றையும் அந்த காரின் மீது ஒட்டி காஜியாபாத் மகிந்திர ஷோரூம் முன்னால் நிறுத்தியுள்ளார்.

அந்த பேனரில், இந்த காரை வாங்குவதும் உங்கள் சொந்த வீட்டை எரிப்பதும் ஒன்றுதான். இந்த காரை சார்ஜ் செய்வற்கு 10 கிலோ வாட் மின் இணைப்பு வாடிக்கையாளர்களுக்கு இருக்க வேண்டும். அப்படி இல்லாதவர்கள் வெளியில்தான் சார்ஜ் போட வேண்டும். இதற்கு ரூ.1,000 வரை செலவு ஆகும். ஒருமுறை சார்ஜ் செய்தால், 300 – 350 கிமீ வரை பயணிக்கலாம் என்று சொன்னார்கள். ஆனால், வெறும் 150 கிமீ வரைதான் செல்கிறது என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Chella

Next Post

”கணவரை பிரிந்து தனிமையில் வாழ இதுதான் காரணமா”..? பிரியங்கா வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா..?

Fri Aug 25 , 2023
விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் தான் பிரியங்கா. இவர் தொகுத்து வழங்கக் கூடிய சூப்பர் சிங்கர், ஸ்ராட் மியூசிக் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கிடையே இவர், கடந்த 2014ஆம் ஆண்டு, விஜய் டிவியில் பணிபுரிந்து வந்த பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், சில மாதங்களிலேயே பிரவீனை விவாகரத்து செய்து விட்டு பிரியங்கா தனிமையில் வாழ்ந்து வருவதாக […]

You May Like