fbpx

இனி Voice மூலம் பணத்தை அனுப்பலாம்!… யுபிஐயில் புதிய அப்டேட்!… எப்படி தெரியுமா?

Voice மூலம் எளிமையாக பயனாளர்களுக்கு தேவையான பணத்தை அனுப்பும் புதிய அம்சத்தை யுபிஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

போன் பே, கூகுள் பே போன்ற பணப் பரிமாற்ற தளத்தை காட்டிலும் யுபிஐ தளத்தில் எந்த ஒரு இடையூறுமே இல்லாமல் எளிமையாக பண பரிமாற்றம் செய்து கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் யுபியை பின் பயன்படுத்தாமலேயே வேகமாக பரிமாற்றம் செய்யும்படியான யுபிஐ லைட் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்த அம்சத்தின் மூலமாக ஒரு நாளைக்கு இரண்டு முறை 2000 ரூபாய் என்ற விகிதத்தில் யுபிஐ லைட் வாலட்டில் பணத்தை ஏற்றி தேவைக்கேற்ப 200 ரூபாய் வரை பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.

இந்த நிலையில் பயனர்களின் அனுபவத்தை சிறப்பாக்கும் விதமாக யூபிஐயில் புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது வரையிலும் வாடிக்கையாளர்கள் தேவையான தொகையை டைப் செய்து பணப்பரிமாற்றம் செய்து வந்த நிலையில் தற்போது வாய்ஸ் மூலமாகவே எளிமையாக பயனாளர்களுக்கு தேவையான பணத்தை அனுப்பும் புது அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.

Kokila

Next Post

"ஒரு ஸ்டால் போட ரூ.2,000 வாங்குறீங்களே" மாநகராட்சி ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக பிரமுகர்…!

Mon Aug 28 , 2023
தனியார் அமைப்பு நடத்தும் நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ. மற்றும் வார்டு கவுன்சிலருக்கு தகவல் சொல்லவில்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனிடம் தரக்குறைவாக நடந்துகொண்ட திமுக பிரமுகர். சென்னை தினத்தை ஒட்டி, சென்னையின் பெருமைகளை ஓவியமாக வரைந்து அதனை கண்காட்சியாகவும், விற்பனைக்காகவும் சென்னை அண்ணா நகர் டவர் பார்க்கில் தனியார் அமைப்பு சார்பில் வைக்கப்பட்டிருந்தது. இந்த கண்காட்சி குறித்து அண்ணா நகர் தொகுதி எம்.எல்.ஏ.வுக்கும், வார்டு கவுன்சிலருக்கும் தகவல் சொல்லவில்லையாம். பொதுவாக […]

You May Like