fbpx

ஆந்திராவில் இளைஞர்களிடம் கிடைத்த புதையல்..! டெல்லி சுல்தானுக்கு சொந்தமானதா..?

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், பொடலகுரு மண்டலம் சித்தேபள்ளி கிராமத்தின் அருகே உள்ள மலையில் பழமையான அங்கம்மா கோவில் உள்ளது, அங்கு தேன் எடுக்க அஜித், வருண், வெங்கடேஷ் ஆகியோர் சென்றனர். அப்போது அங்கு கற்களுக்கு அடியில் ஒரு செம்பு பாத்திரம் இருப்பதை கண்டனர். இளைஞர்கள் கற்களை அகற்றிவிட்டு அந்த செம்பு பாத்திரத்தை வெளியே எடுத்தனர்.

அந்த செம்பு பாத்திரத்தின் உள்ளே தங்க காசுகளை பார்த்த இளைஞர்கள் அந்த கிராமத்தில் உள்ள மற்றொரு நபரிடம் சென்று அந்த பாத்திரத்தை முழுவதுமாக உடைத்து தருமாறு கூறியிருக்கின்றனர். அதன்படி அந்த செம்பு பாத்திரத்தை உள்ளே எடுத்து சென்றவர் சிறிது நேரம் கழித்து வந்து, செம்பு பாத்திரத்தில் ஒன்றும் இல்லை என்று கூறி அதை தூக்கி போடும்படி சொன்னார். ஆனால் ஏற்கனவே அந்த செம்பு பாத்திரத்தில் உள்ளே நாணயங்கள் இருப்பதை போட்டோ எடுத்த இளைஞர்கள் மாவட்ட எஸ்பியை சந்தித்து உண்மையை கூறினர். எஸ்.பி, உத்தரவின் பேரில், போலீசார் கிராமத்திற்கு வந்து, 450க்கும் மேற்பட்ட தங்கக் காசுகளை மீட்டனர். ஆனால், புதையலில் கிடைத்த நாணயங்கள் மூன்று கிலோவுக்கு மேல் எடையும், கோடிக்கணக்கில் மதிப்பும் உள்ளதாக உள்ளூர்வாசிகள் விவாதிக்கின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அங்கம்மா கோயிலில் கண்டெடுக்கப்பட்ட தங்கக் காசுகளில் உருது வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. இது குறித்து இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) இயக்குனர் (எபிகிராபி) கே.முனிரத்தினம் ரெட்டி கூறுகையில், 15 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் இருந்த தங்க நாணயங்கள், விஜயநகர ஹரிஹர மன்னர்கள் I, II மற்றும் டெல்லி சுல்தான்களுக்கு சொந்தமானது. மேலும் ஒரு சில தங்க நாணயங்களின் விளிம்பில் டெல்லி நாணயத்தின் சித்தரிப்பு உள்ளது, என்று கூறினார்.

இப்பகுதியில் உள்ள பழமையான கோவிலுக்கு அருகிலேயே இந்த நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய தொல்லியல் முனிரத்தினம் ரெட்டி “இடைக்காலங்களில், முறையான வங்கி முறை இல்லாததால், மக்கள் தங்கள் பணத்தை கோவில்களில் டெபாசிட் செய்தனர்” என்று விளக்கினார். மேலும் புதையல் கிடைத்த சம்பவம் ஆந்திர முழுவதும் வைரலாகி உள்ளது.

Kathir

Next Post

வாய்க்கு வந்ததெல்லாம் பேசினால், பல அந்தரங்கங்கள் வெளியே வந்துவிடும்….! உதயநிதியை எச்சரித்த முன்னாள் அமைச்சர்….!

Mon Aug 28 , 2023
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை விமர்சித்த உதயநிதிக்கு தற்போது அவர் பதிலடி கொடுத்திருக்கிறார். அதாவது, நீங்கள் உங்கள் நாவை அடக்கி பேச வேண்டும். இல்லையேல், உங்கள் தந்தையை பற்றி பல்வேறு அந்தரங்கங்கள் வெளியிடப்படும் என்று எச்சரித்து இருக்கிறார். அதாவது, அதிமுகவின் பொன் விழா ஆண்டு குறித்த மாநாடு சென்ற வாரம் மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு வருகை தந்த அதிமுகவின் நிர்வாகி ஒருவருடைய மனைவி, காணாமல் போய் இருப்பதாக தகவல் வெளியானது. […]

You May Like