fbpx

நிலவில் செடி வளர்க்கலாமா..? ரோவர் எதையெல்லாம் கண்டுபிடிச்சிருக்கு தெரியுமா..? அடுத்த டார்கெட் இதுதான்..!!

நிலவின் மேற்பரப்பில் சல்ஃபர் இருப்பதை சந்திரயான் – 3 விண்கலத்தின் ரோவர் கண்டறிந்துள்ள நிலையில், அதன் பயன்கள் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் – 3 விண்கலம் கடந்த ஜூலை 14ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலத்தில் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் உள்ளிட்ட கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன. இவை ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் தரையிறங்கியது. நிலவில் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக 5 கருவிகள் லேண்டரில் அனுப்பப்பட்டன. அதேபோல், ரோவரில் ஆல்பா எக்ஸ் ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் அனுப்பப்பட்டுள்ளது.

இது நிலவில் ரசாயன பொருட்கள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்யும். மேலும், தரையிறங்கும் இடத்தில் மண், பாறைகள் இருக்கின்றன என்பதையும் இது ஆய்வு செய்யும். லேண்டரில் ரம்பா எனும் கருவி அனுப்பப்பட்டுள்ளது. இது நிலவில் அயனிகள், எலக்ட்ரான்கள் எவ்வளவு இருக்கின்றன, அதன் அடர்த்தி என்ன என்பதை அளவிடும். மேலும், வெப்பநிலை எவ்வளவு இருக்கிறது என்பதை கண்டறியும் கருவியும், நிலவில் நில அதிர்வு ஏற்படுமா? என்பது குறித்து ஆய்வு செய்ய கருவியும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த 14 நாட்களும் சூரிய வெளிச்சம் நிலவில் படும் என்பதால், ரோவர் சுற்றி சுற்றி புகைப்படம் எடுக்கும். அது எடுத்த புகைப்படங்களை லேண்டர் தகவல்களாக பூமியில் இஸ்ரோவுக்கு அனுப்பி வைக்கும். இந்நிலையில் நேற்றைய தினம் நிலவில் அலுமினியம், கால்சியம், சல்பர், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மாங்கனீஸ், சிலிகான், ஆக்ஸிஜன் இருப்பதாக ரோவர் கண்டறிந்துள்ளது. தற்போது ஹைட்ரஜன் இருக்கிறதா என ஆய்வு செய்து வருகிறது. இவை இருந்தால் அடுத்தது தண்ணீருக்கான தேடலை நோக்கி ரோவர் செல்லும்.

இந்நிலையில், நிலவில் கிடைத்துள்ள சல்பரின் பயன்கள் என்ன என்பதை தற்போது பார்ப்போம். இது ஒரு பூஞ்சை கொல்லி. இது கார் பேட்டரி தயாரிக்கவும், உரம் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் எண்ணெய்யை சுத்திகரிப்பு செய்யவும் தண்ணீரை சுத்திகரிப்பு செய்யவும் தாதுக்களை பிரித்தெடுக்கவும் உதவுகிறது. இது சிமெண்ட், டிட்டெர்ஜென்ட், பூச்சிக் கொல்லிகளை தயாரிக்க பயன்படுகிறது.

இது, தோலின் மேற்புறத்தில் உள்ள அதிகளவு எண்ணெய்யை உறிஞ்சும். முகப்பருக்களை தடுக்கும். தோல் நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் அல்சரால் ஏற்படும் நெஞ்சு எரிச்சலை குறைக்கவும் சல்பர் உதவுகிறது. சல்பர் குளோரோபில் உற்பத்திக்கு தேவையானது. நிலவில் ஆக்ஸிஜன் இருப்பதால் மனிதன் உயிர் வாழ முடியும் என்ற நிலையில் இந்த சல்பர் இருப்பதால் செடிகளில் குளோரோபில் உற்பத்திக்கு உதவும்.

Chella

Next Post

”ஜாமீன் மனுவை என்னால் விசாரிக்க முடியாது.. ஐகோர்ட்டுக்கு போங்க”..!! செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி உத்தரவு..!!

Wed Aug 30 , 2023
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்க முடியாது என சென்னை சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின், நீதிமன்ற காவல் 28ஆம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து, அவர் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்தார். இதனைத்தொடர்ந்து ஜாமீன் கோரி […]

You May Like